13 Aug 2015

அம்பாறை மாவட்ட தமிழர்கள் மாத்திரம் பிரிந்து நிற்பது கவலைக்குரிய விடயமாகும்

SHARE

உலகில் வாழும் அனைத்து தமிழ் இனமும் ஒன்று சேர்ந்துள்ள நிலையில் அம்பாறை மாவட்ட தமிழர்கள் மாத்திரம் பிரிந்து நிற்பது கவலைக்குரிய விடயமாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் முருகேசு நடேசலிங்கம் தெரிவித்தார்.

சம்மாந்துறையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
தமிழன் தமிழனாக வாழாவிட்டால் இந்த தமிழ் இனம் அழிவதை யாராலும் தடுக்க முடியாது குறிப்பாக இளைஞர்கள் தான் நாளைய தலைவர்கள் என்பார்கள் அந்த நிலை அம்பாறை மாவட்டத்தில் இல்லை. இங்கு இளைஞர், யுவதிகள் தங்களுக்கு தொழில் வாய்ப்பு வேண்டும் என்பதற்காக யானைக்கு பின்னால் செல்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் காரியாலயங்களை விட ஐக்கிய தேசிய கட்சியின் காரியாலயங்கள் தான் கூடுதலாக காணப்படுகின்றது.

இம்முறை அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த அனைத்து தமிழ் மக்களும் ஒன்று சேர்ந்து ஒற்றுமைப்பட்டால் எமக்கு 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெறமுடியும். அதனூடாக இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை பெறுவதுடன் வடக்கிலும் கிழக்கிலும் 20 ஆசனங்களை பெற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்துக்கு பங்காளி கட்சியாக இருந்து அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்றார்
SHARE

Author: verified_user

0 Comments: