நாட்டு மக்கள் வெற்றிலைக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் பொதுபல சேனாவின் நாகப்பாம்பு சின்னத்தை வளர்ப்பதற்கு சமமானதாகும்.
பின்பு அவர்களின் ஆதிக்கம் மேலோங்கும் என திருகோணமலை மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் வேட்பாளர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார். கந்தளாய், பேராறு பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை (12) மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பள்ளிவாசல்களை உடைப்பதற்காகவே இத்தேர்தலில் போட்டியிடுகின்றார். இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் அனைத்து அபிலாஷைகளையும் பெறவேண்டுமாக இருந்தால் அனைத்து மக்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கே வாக்களிக்க வேண்டும் என்றார்
0 Comments:
Post a Comment