நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து அதிகப்படியான ஆசனங்களை பெற செய்துள்ளதுடன் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பதை வடகிழக்கு மக்கள் நிருபித்தும் காட்டியுள்ளனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
நடைபெற்று முடிந்த தேர்தல் தொடர்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த தேர்தலை விட இம்முறை 50 வீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிலும் 127,000க்கும் மேற்பட்ட வாக்கை தமிழர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அளித்து மூன்று ஆசனங்களைப் பெறச் செய்துள்ளனர் என்றார்.
மேலும்,இந்தத் தேர்தலில் தோல்வியுற்றாலும் என்னுடைய பணி மக்களுக்காகவே தொடர்ந்துக் கொண்டிருக்கும்.
நாடாளுமன்ற உறுப்பினராகத் தான் இருந்து சேவை செய்ய வேண்டும் என்றல்ல வெளியில் இருந்து கொண்டே சேவை செய்யத் தயாராக உள்ளேன் எனவும் அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment