23 Aug 2015

கைக்குண்டு செயலிழக்க வைப்பு

SHARE

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கறுவாக்கேணிக் கிராமத்தில் மீட்கப்பட்ட கைக்குண்டொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை செயலிழக்கச் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் கிராமத்திலுள்ள கோவிலொன்றின் உற்சவத்தை முன்னிட்டு பொதுமக்கள் சிரமதானத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, இந்தக் கைக்குண்டு சனிக்கிழமை (22) மாலை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

SHARE

Author: verified_user

0 Comments: