2 Aug 2015

தமிழ்த் தேசியப் போராட்டத்தை காட்டிக் கொடுக்கவில்லை - ஐ.தே.க.வேட்பாளர் கணேசமூர்த்தி

SHARE

நான் சிறிது காலம் பிரதி அமைச்சராக இருந்தபோது   பாரிய அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டேன். ஆனால் தமிழ்த் தேசியப் போராட்டத்தை  காட்டிக்கொடுக்கவில்லை. அழிக்கமுற்படவில்லை என மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் எஸ். கணேசமூர்த்தி தெரிவித்தார். 

மட்டக்களப்பு - பட்டிருப்பில் சனிக்கிழமை (01) இடம்பெற்ற ஜக்கிய தேசியக்கட்சி அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தெரிவிக்கையில்….

தமிழ் தேசியத்துக்காக குரல் கொடுக்கும் தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள்  உள்ளன். ஆனால் அன்று ஒட்டக்குழுக்களாக செயற்பட்டவர்கள் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஒட்டிக்கொண்டு தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இவர்கள் தமிழ்தேசிய வாதிகளா? யார் இந்த வேட்பாளர் துரைரெத்தினம்.

நான் ஒரு கதையை மாத்திரம் கூறுகின்றேன். நான் அன்று பிரதி அமைச்சராக  இருந்தபோது கரிகாலனின் சகோதரிக்கு சமுர்த்தி தொழில் வழங்கினேன். 'ஏன் புலியின் தங்கைக்கு தொழில் வழங்கினாய்? புலிக்குடும்பத்துக்கு  தொழில் வழங்கலாமா?' என கொழும்பில் வைத்து துரைரெத்தினம் கேட்டார்.  

தங்கை புலி அல்ல அதனால் தொழில் வழங்கினேன் என நான் கூறினேன். இப்படிப்பட்ட துரைரெத்தினம் எப்படி தமிழ் தேசிய வாதியாவது. இவர் இன்று  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர். 

இவரின் காட்டிக்கொடுத்த கதைகள் பல உண்டு. தமிழ்த் தேசியக்   கூட்டமைப்பு இன்று சாம்பாறாக மாறிவிட்டது. ஒட்டுண்ணிகளை   வைத்துக்கொண்டு எவ்வாறு தமிழ் தேசியம் பேச முடியும்.? என அவர் மேலும் தெரிவித்தார்.   

SHARE

Author: verified_user

1 Comments:

Mukunthan said...

https://www.facebook.com/pages/Somasundaram-Ganeshamoorthy/863770150338624?fref=ts
நேர்மையான ஒரு தலைவன், அபிவிருத்தியின் அர்த்தத்தை மட்டக்களப்பிற்கு காட்டியவர் எங்கள் ஐயா முன்னாள் பிரதி அமைச்சர் கணேசமூர்த்தி. ஒருவருட காலத்துக்குள் எத்தனை அபிவிருத்தி எத்தனை வேலைவாய்ப்புக்கள். அவருக்குத்தான் எங்கள் வாக்கு, நாம் நன்றிக்கடன் மறக்கமாட்டோம். அவரை பாராளுமண்றத்துக்கு அனுப்பாமல் விட்டால் அது நாம் மட்டக்களப்பு மக்களின் தலையில் மண்ணை அள்ளி வாருவதற்கு சமனான ஒரு செயல்.
அதிகாரப்பகிர்வின் போது எமது அபிவிருத்தியின் நாயகன் அமைச்சரவையில் இருக்கச் செய்வோம்