மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் விழிப்புணர்வினை ஏற்படுத்தி சமூகத்தில் இருந்து அந்த வன்முறையினை ஒழிப்பதற்காக ஊடகவியலாளர்கள் தங்களது பங்களிப்பினை வழங்குமாறு மட்டக்களப்பில் செயற்படும் அரசார்பற்ற நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளது.
கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் அமைப்பு மற்றும் இளைஞர் அபிவிருத்தியகம் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்களுடனான சந்திப்பினை கல்லடியில் உள்ள வொய்ஸ் ஒப்மீடியா கல்லூரியின் மண்டபத்தில் நடாத்தியது.
கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் வி.ரமேஸ் மற்றும் இளைஞர் அபிவிருத்தியகத்தின் மாவட்ட இணைப்பாளர் த.திலீப்குமார் ஆகியோர் தலைமையில் இந்த ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் சிறுவர்களுக்கான விழிப்புணர்வு சேவை வழங்குனர்களையும் சமூகத்தினையும் ஒருங்கிணைத்து சமூகத்துக்கு தேவையானவற்றினைப்பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளையும் இந்த நிறுவனங்கள் மேற்கொண்டுவருகின்றன.
அத்துடன் பாதிக்கப்படும் பெண்கள் சிறுவர்களுக்கான சட்ட உதவிகளைப்பெற்றுக்கொடுத்தல் மற்றும் உhயி அதிகாரிகளை தொடர்புகொண்டு நடவடிக்கையெடுத்தல் உட்பட பல வேலைத்திட்டங்களை இந்த நிறுவனங்கள் மேற்கொண்டுவருகின்றது. கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் அமைப்புக்கான நிதியுதவியினை ஐக்கிய நாடுகள் உதவித்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் இயங்கும் பெண்கள் அபிவிருத்தி நிலையம் வழங்கிவருகின்றது.
0 Comments:
Post a Comment