அமையவிருக்கின்ற புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் நானும் அரு அந்தஸ்த்துள்ள அமைச்சராகப் பெறுப்பேற்றதன் பிற்பாடு மட்டக்களப்பு மாவட்டத்தில் அடுத்துவரும் 5 வருடங்களுக்குள் அபிவிருத்தியில் மாபெரும் பரட்சியை ஏற்படுத்தவுள்ளேன். இதற்கு மாட்டத்திலுள்ள அனைவரும் தற்போதிருந்தே ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.
கடந்த பல காலமாக பல இன்னல்களைச் சந்தித்து வந்த எமது சமூகம் இன்னும் இன்னும் பின்னோக்கிச் செல்வதற்கு நாம் வழிசமைத்துக் கொடுக்கக் கூடாது.
என முன்னாள் பிரதியமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான சோமசுந்தரம் கணேசமூர்த்தி தெரவித்துள்ளார். அவரது தேர்தல் பிரச்சாரக் காரியாலயம் ஒன்றை ஞாயிற்றுக் கிழமை (09) மாலை தேற்றாத்தீவு பிரதான வீதியில் திறந்து வைத்துவிட்டு ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்.
எமது சமூகம் இன்னுமின்னும், தேசியத்திற்கும், உணச்சி வார்த்தைகட்கும், உட்பட்டு அபிவிருத்தியில் எட்டாக் கனிகளாகிவிடக்கூடாது. இதற்கு தமிழ் அரசியல்வாதிகளும் துணைபோகக் கூடாது. எனவே இவற்றுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக எதிர் வருகின்ற பொதுத் தேர்தலில் மக்கள் உணர்ந்து செயற்படவேண்டும்.
கடந்த காலங்களில்தான் எமது மக்கள் வாக்களிக்க முடியாமலும், வாக்களிக்கும் உரிமைகள் இல்லாமலும் இன்னல்பட்டார்கள். தற்போது சுதந்திரம் வந்துள்ளது. இவ்வாறான சாதகமாக சூழலில்தான் எதிர் வருகின்ற பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ம்ககள் தங்களது முழு வாக்களிப்பு வீத்ததையும் காட்ட வேண்டும்.
அமையவிருக்கின்ற புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தமிழர் ஒருவர் ஆளும்கட்சி சார்ந்த அமைச்சராக பொறுப்பேற்றால்தான் எமது மக்களின் மத்தியில் காணப்படும் பல அடிப்படைப் பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வு காணலாம் என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment