10 Aug 2015

தமிழ் மக்கள் இராஜாதந்திரமுடையவர்கள்

SHARE

எமது தமிழ் மக்கள் இராஜாதந்திரமுடையவர்கள் என மீண்டும் ஒரு தடவை நடைபெறவிருக்கும் தேர்தலில் நிரூபிப்பார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் மாவை.சேனாதிராஜா தெரிவித்தார்.
மட்டக்களப்பு சித்தாண்டியில் நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் இங்கு தொடர்ந்து கருத்துதெரிவிக்கையில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் எவ்வளவுக்கு வாக்களித்தீர்களோ அதற்கு அதிகமாகத்தான் நீங்கள் வாக்களிப்பீர்கள் என நான் நம்புகின்றேன்.
கடந்த தேர்தலில் நாங்கள் இவ்வாறு கூட்டங்கள், வீடு வீடாக சென்று வாக்கு கேட்கவில்லை, போஸ்டர்கள், துண்டு பிரசுரங்கள் ஒட்டியிருக்கவில்லை.
ஆனால் எங்கள் மக்கள் மிகச் சிறந்த ஜனநாயகவாதிகளாக, இராஜாதந்திரம் கூடியவர்களாக சென்ற ஜனாதிபதி தேர்தலிலே வாக்களித்திருக்கின்றீர்கள். அதற்காக நான் உங்களுக்கு மதிப்பளிக்கின்றேன் என குறிப்பிட்டார்.

SHARE

Author: verified_user

0 Comments: