தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் யாருக்கு என்ற கேள்வி இப்போது வெளியே வரத் தொடங்கியிருக்கிறது.
கடந்த 2010 தேர்தல் போலல்லாமல் இம்முறை இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்திருக்கின்றமையானது பாராட்டத்தக்கது. வடக்கு கிழக்கு மாகாணங்களை மையமாக வைத்துத் தேர்தலில் போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த இரண்டு ஆசனங்களை எவ்வாறான வகையில் பிரிக்கப் போகிறது என்பதுதான் இப்போதைக்கு சிக்கலான விசயம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினைப் பொறுத்தவரையில் கடந்த பொதுத் தேர்தலில் கிடைத்த தேசியப்பட்டியல் உறுப்புரிமை சட்டத்தரணி எம்.பி. சுமந்திரனுக்குக் கிடைத்திருந்தது.
ஆனால் இம்முறை இரண்டு பிரதிநித்துவம் கிடைத்திருக்கின்றமையினால் வடக்கு மாகாணத்திற்கு ஒன்றும் கிழக்கு மாகாணத்துக்கு ஒன்றுமாக வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
தற்போதைய நிலையில் மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்ற எதிர்பார்ப்புகளை ஏற்றதாக்கும் வகையிலேயே இந்தத் தேசியப்பட்டியல்கள் பகிரப்படுதல் வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் இம்முறை ஒரு பெரியளவான மாற்றத்தினைக் கொண்டு வருவதற்காக மேற்கொண்ட முயற்சிகளின் பயனாக 3 உறுப்பினர்கள் கிடைத்திருக்கின்றது.
கிழக்கு மாகாணத்தில் 30 வருடங்களாக போராட்டத்திலும் அதன் ஊடாக ஏற்பட்ட பல்வேறு துன்பங்களையும் எதிர்கொண்டு தமிழ் தேசிய நலனுக்காக தொடர்ந்தும் பாடுபடுகின்றவர்கள் தமிழ் மக்களே.
இந்த மக்களின் ஆதங்கங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுகின்ற வகையிலும், மக்களுடன் நின்று மக்களுக்காக பாடுபடக் கூடிய சிறப்பான சேவையை வழங்கக் கூடியவர்களே கிழக்கில் தேசியப்பட்டியலுக்காகத் தெரிவு செய்யப்பட வேண்டும்.
நீண்ட காலமாக போராட்டத்துடன் இணைந்து செயற்படுகின்ற தமிழ் மக்களின் அரசியலுரிமைக்காக உழைக்கின்றவர்கள். அடி மட்ட மக்கள் முதல் அனைவருக்கும் பாடுபடக் கூடியவர்கள் இணைக்கப்பட்டாகவேண்டும்.
கடந்த பொதுத் தேர்தலிலல் 66000 வரையான வாக்குகளைப் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு இம்முறை அதனுடன் இணைந்ததாகச் செயற்பட்ட வேட்பாளர்களுக்கு மக்கள் மத்தியில் இருக்கின்ற வரவேற்பு, அவர்களுக்கான ஆதரவு, தேர்தல் காலப்பிரச்சாரங்களால் 127000த்தைத் தாண்டிய அளவு வாக்குகளைப் பெற்றது. இது கிழக்கு மாகாண மக்களின் அரசியல் எதிர்பார்ப்பினையே எடுத்துக்காட்டுகின்றது. இந்த எதிர்பார்ப்பினை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நியமனம் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்றும் கிழக்கு மக்கள் விருப்பம் கொண்டுள்ளனர். (tx.su.)
0 Comments:
Post a Comment