உதயன்மூலை கிராமத்துக்குள் நேற்று இரவு சுமார் 8.00 மணியளவில் உட்புகுந்த காட்டு யானைக் கூட்டம் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் உட்புகுந்து வீட்டை தாக்கியதில் வீட்டுக்குள் உறங்கி கொண்டிருந்த குடும்பம் மயிரிழலையில் உயிர்தப்பியுள்ளதாக தெரிவித்தனர்.
குறித்த கிராமத்துக்குள் காட்டு யானை இரவுவேளையில் உட்புகுவதினால் மக்கள் வீடுகளில் உறங்குவதற்கு கூட அஞ்சுவதாக தெரிவிக்கின்றனர் சித்தாண்டி மற்றும் அண்மித்த பகுதிகளில் கடந்த காலங்களில் இருந்து காட்டு யானைகளின் தாக்குதலினால் பல உயிர்கள் மற்றும் படுகாயமடைந்தும் உள்ளதுடன் பலத்த சொத்து சேதங்களும் இடம்பெற்ற நிலையிலும் இற்றைவரைக்கும் உரிய அதிகாரிகள் காட்டு யானை வருகையை கட்டுப்படுத்தவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
0 Comments:
Post a Comment