வாழைச்சேனை - மீறாவோடை பிரதேசத்தில் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் இருவர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திங்கள்கிழமை இரவு மீறாவோடை ஜூம்ஆ பள்ளிவாயல் சந்தியில் அமைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சி காரியாலயத்தில் இருந்த இளைஞர்களே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இரண்டு வாகனத்தில் வந்ததாகவும், அதில் ஒரு வாகனத்தில் இருந்தவர்கள் வாள், கத்தி போன்ற ஆயுதங்களால் தங்களை தாக்கியதாகவும் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இது குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
0 Comments:
Post a Comment