தம்பலகாமம் பிரதேசத்திலுள்ள முள்ளிப் பொத்தானை பஜாரில் இன்று அதிகாலை கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக, தம்பலகாமம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தம்பலகாமம் முள்ளிப் பொத்தானை பிரதேசசபைக்கு முன்னால் உள்ள ஜவுளிக் கடை, மற்றும் பல சரக்கு கடை ஆகியவே இவ்வாறு உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளன.
இதேவேளை சீசீடி படப்பிடிப்பு கெமரா செயலிழக்கச் செய்யப்பட்டு இக் கொள்ளைகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான விசாரணையை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments:
Post a Comment