பாசிக்குடா கடலில் குளித்துக் கொண்டிருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவருடன் ஆபாசமாக நடந்து கொண்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சிவில் உடையில் காணப்பட்ட இராணுவ சிப்பாய் ஒருவர் மீது குறித்த பெண் வழங்கிய முறைப்பாட்டினையடுத்தே கல்குடா பொலிஸார் அவரைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக தெரிவித்தனர்.
இச் சம்பவம் செவ்வாய்கிழமை கல்குடா பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் அங்குள்ள தனியார் சுற்றுலா விடுதி ஒன்றில் கடந்த 3 நாட்களாக தங்கியிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இவர் வழக்கம் போல் செவ்வாய்கிழமையும், முதல் நாள் திங்கள்கிழமையும் கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது குறித்த சந்தேகநபரும் கடலில் குளித்துள்ளார்.
இதன்போது பிரான்ஸ் பிரஜையிடம் சந்தேகநபர் ஆபாசமாக நடந்து கொண்டதுடன் தன்னை பின் தொடர்ந்து மேலும் அசௌகரியங்களை 2 நாட்களாக ஏற்படுத்தியதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
0 Comments:
Post a Comment