மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 45000 வாக்குகளை எதிர்வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெறுமாக இருந்தால் நான் இந்த தேர்தலின் மூலம் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டாலும் நாடாளுமன்றம் செல்லமாட்டடேன் என நான் இவ்விடத்தில் சவால் விடுகின்றேன்.
ஆனால் அவ்வாறு 45000 வாக்குகளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த மாவட்டத்தில் பெறாவிட்டால் கிழக்கு மாகாண முலமைச்சர் அவரது பதவியிலிருவ்து விலகிக் கொள்வாரா என்று கேட்கின்றேன். மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர் வருகின்ற தேர்தலின் மூலம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 5000 வாக்குகளை மாத்திரம்மான் பெற்றுக்கொள்ளும்.
என சமூர்த்தி வீடமைப்பு பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை வேட்பாளருமான, எம்.எஸ்எஸ.;அமீரலி தெரிவித்துள்ளார். புதன்கிழமை (12) மாலை மட்டக்களப்பு பாடுமீன் விடுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்…..
இது ஒருபுறமிருக்க, நான் இனத்துவேசமான அரசியல் செய்பவனல்ல மாறாக தமிழ் தேசியக் கூட்டமைப்புத்தான் இனத்துவேசமான கருத்துக்களை மக்கள் மத்தில் விதைத்து அரசியல் செய்து கொண்டு வருகின்றது. இது ஒரு ஜனநாயக நாடு இதிலே கணக்குப்பார்து அரசியல் செய்பவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாத்திரம்மான். இவர்கள்தான் இனத்துவேசத்தைக் கக்கிக்கொண்டு அரசியல் செய்து கொண்டு வருகின்றார்கள்.
தமிழ் சமூகத்திற்கு வெறும் பொய் வார்த்தைகளைக் கூறிக் கொண்டு அந்த சமூகத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மென்மேலும் ஏமாற்ற வேண்டாம் எனவும் நான் இவ்விடத்தில் அவர்களுக்கு வினையமான வேண்டுகோளை விடுக்கின்றேன்.
எதிர் வருகின்ற 17 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 ஆசனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறுமாக இருந்தால் 4வது ஆசனத்தை ஐக்கிய தேசிக் கட்சி பெற்றுக் கொள்ளும், 5வது ஆசனத்தையும் ஐக்கிய தேசியக் கட்சி பெற்றுக்கொள்ளும் போராட்டத்தில் தற்போது நாம், இறங்கியுள்ளோம். இதன் முன்னோடியாகத்தான் இந்த பாத்திரிகையாளர் மாநாடும் நடைபெறுகின்றது.
இம்முறை மட்டக்களப்பு மாட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு எந்தவித ஆசனங்களும் கிடைக்காது. அவ்வாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு எந்தவித ஆசனங்களும் கிடைக்காமல் இருக்குமிடத்து அதை ஐக்கிய தேசியக் கட்சிதான் பெற்றுக் கொள்ளும்.
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 90 வீதமான முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஏம்மோடு இணைந்துள்ளார்கள். மட்டக்களப்பு மாட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிடும் 8 வேட்பாளர்களும் கட்சியின் அங்கத்துவமில்லாதவர்களாகும். இந்த நிலையில்தான் அவர்கள் இத்தேர்தலை எதிர் கொள்கின்றார்கள்.
கல்குடா தொகுதியில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினால் தேர்தல் வன்முறைகளை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment