25 Jul 2015

பிரபாகரனை உயிருடன் பிடித்ததாக நான் கூறவில்லை

SHARE

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில் நான் கூறியதாக வெளியாகியுள்ள செய்தி தவறானதென்று விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாண முன்னாள் தளபதியும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

"தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ததாகக் கூறப்படுவது நூற்றுக்கு நூறு வீதம் உண்மையானதாகும் என்றும் இருப்பினும், அவரை எவ்வாறு கைது செய்தார்கள் என்பது பற்றி எனக்கு தெரியாது என்றும்" நான் ஊடகமொன்றுக்கு பேட்டியளித்துள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


எனினும் தான் இவ்வாறான எந்த செய்தியையும் கூறவில்லை என்றும் அது உண்மைக்கு புறம்பானது என்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். 

தேர்தலை இலக்காக வைத்து முகுநூல் மற்றும் இணையத்தளங்களில் நான் இவ்வாறு ஊடகமொன்றிற்கு பேட்டியளித்துள்ளதாக கூறி செய்திகள் வெளியாகியுள்ளன என்று கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
SHARE

Author: verified_user

0 Comments: