1 Jul 2015

அமைச்சராவதும் உறுதி: அம்பாறைத் தமிழர்களுக்கு அரணாக விளங்குவேன் -தயாகமகே

SHARE
இந்த நாட்டில் வருகின்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியமைப்பதும் நான் அமைச்சராவதும் உறுதியாகிவிட்டது. ஆனால் நான் மூவினமக்களதும் ஆதரவுபெற்ற அரசியல்வாதியாகத் திகழ்வேண்டுமென்ற விருப்பத்தினால் தங்களிடம் வந்துள்ளேன்.
இவ்வாறு திருக்கோவில் வினாயகபுரம் மைதானத்தில் இடம்பெற்ற ஐ.தே.கட்சியின் பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றிய ஐ.தே.கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்குமாகாணசபை உறுப்பினருமான பிரபல தொழிலதிபர் தயாகமகே தெரிவித்தார்.
இக்கூட்டம் தயாகமகேயின் அம்பாறை மாவட்ட தமிழ்ப்பிரதேசங்களுக்கான பொறுப்பாளர் வி.வினோகாந்தின் ஏற்பாட்டில் கடந்த ஞாயிறன்று பெருந்திரளான பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது.
தொழிலதிபர் தயாகமகே இக்கூட்டத்திற்கு சொப்பரில் (உலங்கு வானூர்தி)வந்தமையினால் அதனைப்பார்க்கவும் கூட்டம் அதிகரித்திருந்தது.

அங்கு தயாகமகே மேலும் உரையாற்றுகையில்:
கொழும்பு பிராந்தியத்தையொத்த பொருளாதார வர்த்தக மையமுள்ள பிராந்தியமாக அம்பாறை மாவட்டத்தை மாற்றுவதே எனது எதிர்கால இலக்காகும். இங்கிருந்து இளைஞர்கள் யுவதிகள் கொழும்பு செல்வதற்குப் பதிலாக வேறிடங்களிலிருந்து அம்பாறைக்கு வரும்வண்ம் அபிவிருத்தி செய்யவுள்ளேன்.
அக்கரைப்பற்று முதல் பொத்துவில் ஈறாகவுள்ள தமிழ்ப் பிரதேசங்களில் வாழும் 2000 இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பை வழங்குவதும் எனது எதிர்காலதிட்டமாகும். தற்போதே கணிசமான தமிழ் முஸ்லிம் யுவதிகளுக்கு வாழ்வாதாரத்திற்கான தொழிலை வழங்கியுள்ளேன்.
கல்முனை ஆதாரவைத்தியசாலைக்கு கிடைத்த 25கோடி ருபாவை சுகாதார பிரதியமைச்சர் ஹசன்அலி திட்மிட்டு மற்ற ஆஸ்பத்திரிக்கு மாற்றினார்.அதனை நான் மேலிடத்தில் பேசி மாற்றியுள்ளேன்.
இப்புகதுpக்கு குடிநீர் பிரச்சினையாகக்கூறப்பட்டது. இதற்கு முதற்கட்டமாக 30 குழாய்க்கிணறுகளை அமைக்கவுள்ளேன். சமாதுப்பிள்ளையாhர் ஆலய கட்டட வளர்ச்சிக்காக 100பக்கட் சீமேந்து பக்கட்டுகளை வழங்கவுள்ளேன்.

மேலும் விளையாட்டுக்கழகங்களுக்கு தேவையான உதவிகளை வழங்கத்திட்டமிட்டுள்ளேன்.
தமிழர்களுக்கு அரணாக விளங்குவேன்
ஜனாதிபதி மைத்திரிக்கு வாக்களிக்குமாறு அன்று நான் கெட்டதற்கு நீங்கள் பூரணமாக ஆதரவு வழங்கினீர்கள்.நன்றிகள். அதே ஆதரவை எனக்குத்தாருங்கள்.முடிந்த அத்தனை உதவிகளையும் நிச்சயம் செய்வேன்.
அம்பாறை மாவட்ட தமிழர்களுக்கு ஒரு அரணாக விளங்குவேன். முஸ்லிம் மக்களுக்கு தேவையான அரசியல்வாதிகளுள்ளனர். அவர்கள் நிறைய உதவுவாhர்கள். தமிழர்கள் அரசியல் அநாதைகளாக உள்ளதனால் நான் உதவுவேன்.மாகாணசபையில் அமைச்சர் கிடைத்திருந்தால் கதைவேறு.
மாகாண அமைச்சர்களால் என்ன பயன்?
கிழக்கு மாகாணசபையிலுள்ள இரண்டு த.தே.கூட்டமைப்பு அமைச்சர்களால் இதுவரை தமிழ்மக்களுக்கு கிடைத்ததென்ன? ஒரு நன்மை ஒரு உதவி! இதுவரை இவர்களால் உன்றுமே செய்யமுடியவில்லை.
அதுவும் மட்டு.திருமலை மாவட்டத்திற்கு மட்டுமே இவற்றை வழங்கிஅ ம்பாறை மாவட்டத்தை புறக்கணித்தார்கள்.தேர்தல் வந்ததும் இனி வருவார்கள்.

த.தே.கூட்டமைப்பினர் முஸ்லிம்களிடம் அடிபணிந்து ஏன் அரசியல் செய்கிறாhர்கள்? இதுதான் எனது கவலை.
எம்முடன் கைகோருங்கள்.விமோசனம் கிடைக்கும். என்றார்.

முன்பள்ளி சிறார்களுக்கு இலவசமாக நூல்கள் உதவிகள் வழங்கப்பட்டன.
ஜ.தே.க.பிரமுகர்களான திலகன் ரெட்ணசிங்கம் ரவிஆனந்தி ஆலய தலைவர்கள் கி.அ.சங்க நிருவாகிகள் ஆகியோருட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.


DSC_9571

DSC_9573
DSC_9598
DSC_9616
unnamed
SHARE

Author: verified_user

0 Comments: