1 Jul 2015

அதிபர்கள், ஆசிரியர்களுக்கான விசேட செயலமர்வு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் திருகோணமலை மாவட்டக்கிளை ஏற்பாடு

SHARE
திருகோணமலை கல்வி வலயத்தில் கடமைபுரியும் அதிபர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் எதிர்வரும் 04.07.2015 (சனிக்கிழமை) உவர்மலை விவேகானந்தாக் கல்லூரியில் விசேட செயலமர்வு ஒன்றினை இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் திருகோணமலை மாவட்டக்கிளை ஒழுங்கு செய்துள்ளது.

காலை 08.30 மணிமுதல் மாலை 04.00மணிவரை நடைபெறும் இச்செயலமர்வானது ஆசிரியர்களின் தொழில் சார்ந்த விடயங்களை உள்ளடக்கியதாகவும், பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பதாகவும் அமைந்திருக்கும் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் திருகோணமலை மாவட்டச் செயலாளர் பா.தேவராஜா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சர்வதேச கல்வியகத்தினதும், நோர்வே ஆசிரியர் சங்கத்தினதும் ஒத்துழைப்புடன் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் திருகோணமலை மாவட்டக்கிளை இச்செயலமர்வினை ஒழுங்கு செய்துள்ளது.
இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் திருகோணமலை மாவட்டத்தலைவரும், தம்பலகமம் ஆதிகோணேஸ்வரா மகாவித்தியாலய அதிபருமாகிய திரு.வே.தவராஜா தலைமையில் நடைபெறும் இச்செயலமர்விற்கு பிரதம அதிதியாக திருகோணமலை கல்வி வலய கல்விப் பணிப்பாளர் திரு.ந.விஜேந்திரன் கலந்துகொண்டு செயலமர்வை ஆரம்பித்துவைக்கவுள்ளார்.
சர்வதேச கல்வியகத்தின் பல பயிற்சிப்பட்டறைகளில் பங்கெடுத்தவர்களான இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளரும், விரிவுரையாளருமான சரா.புவனேஸ்வரன், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகச் செயலாளரும் பெரிய கல்லாறு மத்திய கல்லூரி அதிபருமாகிய திரு.கே.நல்லதம்பி, இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பெண்கள் வலையமைப்பு ஆலோசகரும், சர்வதேச பெண்கள் வலையமைப்பின் இணைப்பாளருமாகிய திருமதி.ஈ.ஜெ.மகேந்திரா ஆகியோரும் கலந்துகொண்டு கருத்தரங்கை வழிப்படுத்தவுள்ளனர்.
கலந்துகொள்ளும் பங்குதாரர்களுக்கான சிற்றுண்டி தேநீர் மற்றும் மதிய உணவு என்பன ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதோடு, போக்குவரத்துக் கொடுப்பனவுகளும் வழங்கப்படவுள்ளன.
செயலமர்வில் கலந்துகொள்ளும் ஒவ்வொருவருக்கும் கல்வி அமைச்சின் சுற்றுநிருபங்கள் அடங்கிய ஏராளமான கையேடுகளும் இலவசமாக வழங்கப்படவுள்ளதாக மாவட்டச் செயலாளர் திரு.பா.தேவராஜா அறிவித்துள்ளார். இதற்கான அனுமதியை வலயக் கல்விப் பணிப்பாளர் வழங்கியுள்ளதால் அழைக்கப்பட்ட அனைவரையும் தவறாது கலந்துகொண்டு பயன் பெறுமாறு அவர் கேட்டுள்ளார்.
வி.ரி.சகாதேவராஜா
தலைவர்.

சரா.புவனேஸ்வரன்
பொதுச் செயலாளர்.
SHARE

Author: verified_user

0 Comments: