26 Jul 2015

2016 இல் அரசியல் தீர்வு பெறாவிட்டால் த.தே.கூ. அரசியலிலிருந்து வெளியேறுமா? இவ்வாறு கேள்வி எழுப்பகிறார் வேட்பாளர் சிவநேசன்

SHARE

இலங்கை சுதத்திரமடைந்து காலம் தெடக்கம் தேத்தல்களை மாத்திரம், இலக்காக வைத்து தமிழ் அரசியல் தலைமைகள், தமிழ் மக்களை உணர்ச்சிக் கொந்தளிப்பிற்கு இட்டுச் சென்றமை வரலாற்று உண்மையாகும். அதன் விளைவாக நாம் சொல்லொணாத் துயரங்களையும், உயிர் உடமைகளையும், இழந்து நாம் அரசியல் அனாதைகளாகவுள்ளோம்.

என மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் கிருஸ்ணபிள்ளை சிவநேசன் தெரிவித்துள்ளார்.

பெரியபோரதீவில் அமைந்துள்ள அவரது கட்சி அலுவலக்த்தில் சனிக்கிழமை (25) மாலை நடைபெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான சந்திப்பிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…

எமது இனத்தின் பின்னடைவுகளுக்கு தமிழ் அரசியல் தலைமைகளே காரணம், ஏனெனில் தூர நோக்கற்ற வெறுமனே தேர்தல் வெற்றிக்காக ஒன்றிணைந்த அரசியல்வாதிகள், தமிழ் தேசியக் கூட்டமைப்பு என தங்களை அறிவித்துக் கொண்டு, தமிழ் ஈழத்துக்கான மக்கள் ஆணையைக் கூறி மக்களிடமிருந்து அமோக வெற்றியீட்டினர். 


பின்னர் மக்கள் வழங்கிய ஆணையை மறந்து, செயற்பட்ட காரணத்தால், இளைஞர் யுவதிகள் ஆயும் ஏந்திப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.  தேர்தல் காலங்களில் மக்களுக்கு வழங்கபட்ட வாக்குறுதிகளால், தமிழ் இனம் அழிவின் வழிம்பிற்குச் சென்றதை நாம் அனைவரும், அறிந்த விடையமே!.

இந்த பாரிய அழிவிற்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள் தமிழ் மிதவாத அரசியல்வாதிகளேதான். மேலும் மேலும் அவர்கள் பழையவற்றை மறந்து மக்களை மீண்டும் ஒன்றிணையுமாறு எதிர் வரும் நாடாளுமன்றத் தே;தலுக்காக வேண்டி அழைப்பு விடுக்கின்றனர்.

இந்த தேர்தலில் 20 ஆசனங்களைப் பெறுவதற்கு ஒன்றிணைந்து வாக்களிக்குமாறும், 2016 இல் இனப்பிரச்சனைக்குத் தீர்வைப் பெற்றுத்தருவதாகவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின்னர் தற்போது தமிழ் மக்கள் மத்தியில் பொய் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றர்.

பல தசாப்த காலம் புரையேடிப்போயிருக்கும் அரசியல் பிரச்சனைக்கு, வெறுமனே ஓர் ஆண்டுக்குள் தீர்வைப் பெற்றுத்தருவதாகக் கூறுவது, மீண்டும் எம்மினத்தை ஏமாற்றும் கபட நாடகமாகும். அரசியல் தீர்வைப் பெறுவதற்கு எதற்காக 20 நாடாளுமன்ற ஆசனங்கள் அவர்களுக்குத் தேவைப் படுகின்றன. இதுவும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் போன்று, மக்களை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் இலக்காகவே நாம் இவற்றை நோக்குகின்றோம்.

2016 இல் தீர்வு பெற்றுத் தராவிட்டால், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இதுவரை காலமும், இலங்கை சுதந்திரமடைந்ததற்குப் பிற்பாடு, தமிழ் மக்கள் சார்பாக தாங்கள் எடுத்த அனைத்துப் பிளையான தீர்மானங்களுக்கும், எமது மக்களுக்கு ஏற்பட்ட அனைத்து உயிர் இழப்புக்களுக்கும், தார்மீகப் பெறுப்பேற்று, பகிரங்க மன்னிப்புக்கூறி அரசியலிலிருந்து முற்றுமுழுதாக வெளியேறுவார்களா? எனவும் அவர் இதன்போது கேளவி எழுப்பினர்.








SHARE

Author: verified_user

0 Comments: