26 Jul 2015

சுந்தரமூர்த்தி நாயனாரின் குருபூஜை தினத்தினம்

SHARE

சுந்தரமூர்த்தி நாயனாரின் குருபூஜை தினத்தினமான ஆடிச் சுவாதி நட்சத்திரதில் வெள்ளிக் கிழமை (24)  மட்.மண்டூர் மகா வித்தியாலயத்தில் சிறப்பு பூஜை  நிகழ்வுகள் வித்தியாலயத்தின் அதிபர் நா.புட்பமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வின் போது மாணவர்களினால் சுந்தரமூர்த்தி நாயனாரினால் அருளிச் செய்யப்பட்ட பதிகப் பாடல்கள் மாணவர்களினால் ஓதப்பட்டது. 

இதனையடுத்து நாயனாரின் உருவவப்படத்திற்கு தீபாதாரனை காட்டப்பட்டு பூஜை நடைபெற்றது. நாயனார் சைவத்திற்காற்றிய தொண்டுகள் பற்றிய சிறப்புரையை வித்தியாலய அதிபர் ஆற்றியிருந்தார்.

அவர் தனதுரையில்  சைவத்திற்கு தொண்டாற்றியவர்களின் மகிமையை தற்கால மாணவ சமூகத்திற்கு தெளிவு படுத்தும் நோக்கில் நாயன்மார்களின் குருபூஜை தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.என அவர் இதன்போது தெரிவித்தார்




SHARE

Author: verified_user

0 Comments: