தமிழர் அனைவரும் ஒற்றுமையுடன் வாழவேண்டும், தமிழ் தேசியம் மலர வேண்டும், என்ற நோக்குடன் வாழ்கின்ற இவ்வேளையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் பெறும் தமிழர் விடுதலைக் கூட்டணியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியேற்றுகின்றது என்ற செய்தி மிகுந்த மனவேதனையைத் தருகின்றது. ஒருசிலர் விட்ட தவறுகளுக்காக தமிழினம் பிரிந்து வாழ்வதை நான் விரும்பவில்லை.
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை (வெள்ளிமைல) தெரிவித்துள்ளார்.
திங்கட் கிழமை (22) மாலை 6 மணியளவில் மேற்படி மாகாணசபை உறுப்பினரின் களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்……
1977 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தோற்றம் பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியில்தான் இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர் கட்சித் தலைவராக இருந்து அமிர்தலிங்கம் செயற்பட்டார். அதனைத் தொடர்ந்து வந்த தேர்தல்கள் அனைத்திலும் 2004 ஆம் ஆண்டு வரைக்கும். தமிழர் விடுதலைக்கூட்டணியே வெற்றி பெற்று 2004 ஆம் ஆண்டில் 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு இந்நாட்டில் வரலாறு படைக்கப்பட்டது.
ஆனால் தற்போது தமிழர் விடுதலைக்கூட்ணி தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப் பட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாகத்தான் அறிய முடிகின்றது. எதிர் வருகின்ற தேர்தல்களில் ரெலோ, தமிழரசுக் கட்சி, ஈபி.ஆர்.எல்.எவ், பிளட், ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்துதான் தேர்தலிகளில் போட்டியிடும் எனவும், ஊடகங்கள் வாயிலாக அறிகின்றேன்.
தமிழர் அனைவரும் ஒற்றுமையுடன் வாழவேண்டும், தமிழ் தேசியம் மலர வேண்டும், என்ற நோக்குடன் வாழ்கின்ற இவ்வேளையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் பெறும் தமிழர் விடுதலைக் கூட்டணியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியேற்றுகின்றது என்ற செய்தி மிகுந்த மனவேதனையைத் தருகின்றது. ஒருசிலர் விட்ட தறவுகளுக்காக தமிழினம் பிரிந்து வாழ்வதை நான் விரும்பவில்லை.
1965 ஆம் ஆண்டு காலத்தில் தமிழரசுக் கட்சியின் தொண்டனாகவும், இளைஞர் போரவையின் உறுப்பினராகவும் செயற்பட்டு வந்தேன். பல போராட்டங்களில் பங்கெடுத்து, சிறைவாசம் செற்றும் மக்களுக்காக பல இன்னல்களைச் சந்தித்தும், இன்றுவரை தமிழ் தேசியத்திற்காகப் நான் பாடுபட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், எதிர் வருகின்ற பொதுத் தேர்தலில், நான் போட்டியிடுவதை சில அரசியல் வாதிகள் எதிர்த்து வருகின்றனர்.
அரசியலில் என்னுடைய மக்கள் செல்வாக்கையும், வளர்ச்சியையும் விரும்பாத சிலர் எனக்கு எதிர் வருகின்ற பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கு உரிய இடம் மறுக்கப் படுவதாக பலரும் கதைத்து வருகின்றனர்.
எதிர் வருகின்ற பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய்ககூட்டமைப்பின் சார்பில் எனக்கு போட்டியிரும் சந்தர்ப்பம் இடைக்கவில்லையாயின் தமிழ் தேசியத்திற்குப் பங்கம் ஏற்படாத வகையில் செயற்படுவேன்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது இருக்கின்ற 3 நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகையை எதிர் வருகின்ற பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 4 நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டுமாயின் மக்கள் விரும்புகின்ற வேட்பாளர்களை, தேர்தலில் நிறுத்த வேண்டும்.
எனவே இறுதியின் முதலுமாக எனது கருத்துக்களையும், மக்களின் கருத்துக்களையும், ஏற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை எனக்கு அக்கூட்டமைப்பின் சார்பில் எதிர் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பேட்டியிடுவதற்கு உரிய சந்தர்ப்பம் தருவார்கள் என எதிர் பார்க்கின்றேன்.
தமிழ் தேசியக் கூட்மைப்பிலிருந்து தமிழர் விடுதலைக் கூட்டணி அகற்றப்பட்டாலும், தமிழ் தேசியம் மலர்வதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும். ஒரு சிலரின் அற்ப, செர்ற்ப ஆசைகளுக்காக தமிழ் கட்சிகளை பிரித்து ஆள்வதால் தமிழ் மக்கள் கடந்த காலங்களில் ஏற்பட்ட இழப்புக்களை மீழப்பெறமுடியாது. எனவே அனைத்து தமிழ் மக்களையும் ஒன்றிணைத்து செயற்பட்டால் மாத்திரமே கடந்த கால எமது மக்களின் இழப்புக்களை மீழப் பெறமுடியும். அவ்வாறு தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுமைப் பட்டு செயற்படவில்லையாயின் தற்போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு;ககின்ற 3 நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவடையக் கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன. ஏன அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment