மட்டக்களப்பு மாவட்டத்தின் பழுகாமம்,மண்டூர், நவகிரிப்பிரிவு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான, தும்பங்கேணிக் கிராமத்தில் அமைந்துள்ள நெல் சந்தைப் படுத்தும் வளாகத்திற்குள் திங்கட் கிழமை (22) அதிகாலை புகுந்த காட்டு யானை நெல் சந்தைப்படுத்தும் வளாகத்தின் சுற்று வேலியின் ஒரு பகுயை உடைந்து சேதப்படுத்தியுள்ளதாக மேற்படி கூட்டுறவுச் சங்கத்தின் பொதுமகாமையாளர் வ.பரமலிங்கம் கூறினார்.
நெல் சந்தைப்படுத்தும் சபையால் பெறப்பட்ட நெல் மூட்டைகள் இந்த கட்டடத்தினுள் சேகரித்து வைக்கப் பட்டுள்ளன. நெல்லின் வாசத்தை நுகர்ந்த காட்டு யானை, வளாகத்தின் சுற்று வேலையை உடைத்துக் கொண்டு உள்நுளைந்துள்ளது இருந்த போதிலும் கட்டடத்திற்கு எதுவித பாதிப்பும் ஏற்படுத்தவில்லை.
தமது சங்கத்திற்கு இதனால் சுமார் 15000 ரூபாவுக்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் வெல்லாவெளி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், பழுகாமம், மண்டூர், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்குச் பொது முகாமையாளர் வ.பரமலிங்கம் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment