
இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெ.ஜெனார்தனன் இவ்வாறு தெரிவிக்கிறார்.
தற்போது விளையாட்டு கழகங்களுக்கிடையில் மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகள் இடம் பெற்று வருகின்றது.இப் போட்டியில் கலந்துகொள்ளும் வீர வீராங்களைகள் ஏனைய மாவட்டங்களில் இருந்து திருகோணமலைக்கும் வேறு மாவட்டங்களுக்கும் சென்று வருகின்றனர்.இவர்களுக்கான போக்குவரத்து மற்றும் உணவுச் செலவினை பணமாகவே கடந்த ஆண்டுகளில் வழங்கப்பட்டு வந்தது ஆயினும் தற்போது போக்குவரத்து செலவு மட்டுமே பணமாகவும் ஏனைய உணவுச் செலவுகள் உணவாக வழங்கப்படுகின்றது இதனால் வீர வீராங்கனைகள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் அசௌகரிகங்களை எதிர் கொண்டு வருகின்றனர்.
இவ்விடயத்தை கேள்வியுற்று இன்று 07.06.2015 திருகோணமலை கந்தளாய் மத்திய கல்லூரியில் இடம் பெற்ற எல்லே விளையாட்டு போட்டியில் இடம் பெறும் நடை முறைகள் தொடர்பாக நேரடியாக சென்று மேற்பார்வையிட்டு கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்கள பணிப்பாளரிடம் இவ்விடயத்தை வினவிய போது பணிப்பாளர் இவ்விடயம் தொடர்பாக தகுந்த பதில் வழங்காத காரணத்தால் இவ்விடயத்தை கிழக்கு மாகண முதலமைச்சர் நசீர் அகமட் மற்றும் கல்வி மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சி.தண்டாயுதபாணி ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்தமையை தொடர்ந்து இப்பிரச்சினைக்கு தகுந்த நடவடிக்கை வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கடந்த வாரங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிழக்க மாகண விளையாட்டு திணைக்கள பணிப்பாளரின் நேரடி மேற்பார்வையில் இடம் பெற்ற மாகண மட்ட கொக்கி விளையாட்டின் போது வழங்கிய உணவு தரம் இல்லை என மட்டக்களப்பை பிரதிநிதித்துவம் செய்யும் மாகாண சபை உறுப்பினர்கள் முறையிட்டிருந்தனர் எனவும் கிழக்கு மாகணசபை உறப்பினர் ஜெ.ஜெனார்தனன் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment