15 Jun 2015

சமூகசேவையாளர்கள் மற்றும் சாதனையாளர்கள் கௌரவிப்பு

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் மகிழடித்தீவு கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் இறுதி நாளாகிய ஆலய பரிபாலன சபையின் தலைவர் மு.அருட்செல்வம் தலைமையில் நடைபெற்ற கலை நிகழ்வின்போது சாதனையாளர் கௌரவிப்பும் இடம்பெற்றது.

இதன்போது சிறந்த ஆலயத்தொண்டு, சிறந்த சமூகசேவை புரிந்த சமூக சேவையாளர்களுக்கான கௌரவிப்பில் பொ.நேசதுரை(அதிபர்), க.தியாகராசா (அதிபர்) ஆகியோர் கௌரவிக்கப்பட்டதுடன், ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த, கல்வி பொதுத்தர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த, மற்றும், பல்கலைக் கழகம், கல்வியல் கல்லூரிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்குமாக 25 மாணவர்களுக்கும் இதன்போது நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் சிவயோகச் செல்வன் சிவஸ்ரீ சாம்பசிவக் குருக்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், ஆலய பரிபாலன சபையினர், கிராமசேவை உத்தியோகத்தர்கள், அப்பகுதி பாடசாலைகளின் அதிபர்கள், கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர







SHARE

Author: verified_user

0 Comments: