30 May 2015

பத்தினி தெய்வத்திற்கு விழாக்கோலம்

SHARE

ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் தலைவியான சோழ நாட்டு கண்ணகி பாண்டி நாட்டில் வீரக் கற்பரசியாகி, சேர நாட்டிலே பத்தினித் தெய்வம் எனப் போற்றப்பட்டு, இலங்கையிலே மட்டக்களப்பு பிராந்தியத்தில் கண்ணகை அம்மனாக கோவில்கள் கொண்டுள்ளாள்.

மட்டக்களப்பு பகுதியில் கண்ணகை அம்மன் கோவில்களில் நடக்கும் திருவிழாவை சடங்கு என்று கூறுவது  வழக்கம். வருடந்தோறும் வைகாசி மாத பூரணை நாளுக்கு முந்திய வளர்பிறை காலத்தில் (பூர்வ பட்சம்) விழா நடத்தப்படுகிறது.

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் அமைந்துள்ள முனைக்காடு கண்ணகி அம்மன் ஆலயம், முதலைக்குடா கண்ணகி அம்மன் ஆலயம், குறிஞ்சிநகர் கண்ணகி அம்மன் ஆலயம், மகிழடித்தீவு கண்ணகி அம்மன் ஆலயம், கொக்கட்டிச்சோலை கண்ணகி அம்மன் ஆலயம் மற்றும், களுவாஞ்சிகுடி, புதுக்குடியிருப்பு, எருவில், துறைநீலாவணை, தும்பங்கேணி, போன்ற இடங்;களில், கண்ணகிக்கான விழா கடந்த 25 ஆம் திகதி முதல்  மிகச்சிறப்பாக இடம்பெற்று வருகின்றன. 

இதற்காக வேண்டி கிராமங்கள், வீதிகள் தோறும் மின் விளக்குகளாலும், தோரணங்களாலும் தற்போது அலங்கரிக்கப் பட்டு வருவதையும் அவதானிக்க முடிகின்றது.

சடங்குகளின் போது கலைநிகழ்வுகள், கூத்துக்கள், கதாப்பிரசங்கங்கள் என்பன சிறப்புற இடம்பெறுவதும் குறிப்பிடத்தக்கது.













SHARE

Author: verified_user

0 Comments: