சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க நிறுவனம், USAID)> Building Solutions (Pvt.) Ltd உடன் இணைந்து அமை;பாறை நவகம்புரவில் புதன் கிழமை (27) சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத கூரைத்தகடுகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றைத் திறந்து வைத்துள்ளது.
இதில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஐக்கிய அமரிக்க தூதரகத்தின் பதில் தூதுவர் அலிசன் அரியஸ் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டு இத் தொழிற்சாலையைத் திறந்து வைத்துள்ளனர்.
அமெரிக்காவுக்கும், இலங்கைக்குமிடையில் நிலவும் மற்றும் வலுவடைந்து வரும், உறவிற்கான உதாரணமாக இந்த பதிய தொழிற்சாலை அமைந்துள்ளது என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமர வீர இதன்போது கூறினார், எதிர்காலத்தில் அமெரிக்காவுடனான, தொடர்ச்சியான உரையாடல் மற்றும் பங்காளித்துவதைத்தையும் நாம் எதிர் பார்ககின்றோம்.என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக தேர்ச்சிக்கான ஐக்கிய அமெரிக்க அரசாங்கம், மற்றும் அமெரிக்க மக்களின் அர்ப்பணிப்புக்கான சிறந்த உதாரணமாக இந்த தொழிற்சாலை திகழ்கின்றது. என ஐக்கிய அமெரிக்க தூதரகத்தின் பதில் தூதுவர் அலிசன் அரியஸ் இதன்போது தெரிவித்தார். இச்செயற்பாடானது சிறந்ததொரு வெற்றிக் கதையாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இத்தொழிற்சாலையை நிருமாணிப்பதற்காகவும், துருப்பிடிக்காத இரும்புக் கூரைகள், மற்றும், உருவாக்குவதற்குமான விசேட இயந்திரங்களைப் பெருத்துவதற்குமாக USAID மற்றும்,Building
Solutions ஆகிய அமைப்புக்கள் இணைந்து 800000 அமெரிக்க இதில் டொலர்களை முதலீடு செய்துள்ளன.
இத்தொழிற்சாலைக்குத் தேவையான ஆற்றல், திறன், போன்ற பல நிபுணத்துவங்களையும், பயிற்சிகளையும USAID வழங்கியுள்ளது. இந்தொழிற்சாலையானது அம்பாறை மாவட்டத்தில் வேலைவாய்பற்றிருக்கம் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் வளர்ந்து வரும் தொழிற்துறையின் விசேட தேவைகளை உள்வாங்கும் வகையில் இந்த அம்பாறை தொழிச்சாலையில் உற்பத்தி செய்யப்படும் புதிய கூரைத்தகடு உற்பத்திகள் அமைந்திருக்கும். இந்த உற்பத்திகள் நூறுவீதம் மீழ் சுழற்சி செய்யப்படக் கூடியதாகும். மேலதிகமாக சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத உற்பத்திச் செயற்பாடானது, சக்தி. முற்றும் விரையத்தினையும், குறைத்து கழிவுகளை மீழ் சுழற்சிக்கு உட்படுத்தக் கூடியதாகும் என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.
0 Comments:
Post a Comment