தற்போதைய காலகட்டத்தில் மனிதன் உலகத்தோடு இரண்டறக் கலந்து, விஞ்ஞானத்திலும், தொழில் நுட்பத்திலும், முன்னேற்றம் அடைந்து கொண்டு வருகின்றான். இந்த முன்னேற்றமானது. முக்கள் மத்தியில் நஞ்சுத் தன்மையான உணவு உற்பத்தியை ஏற்படுத்தக்கூடிய சூழ் நிலையை உருவாக்கியுள்ளது. இதனால் மனித சமூகம் அழிந்து கொண்டு செல்லும் சூழல் தற்போது உருவெடுத்துள்ளது. விவசாயத்துறை ஒருபக்கம் முன்னேற்றமடைந்து கொண்டு செல்ல, மனிதன் மறுபுறம் அழிந்து வருகின்றான்.
என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் தெரிவித்துள்ளார்
இயற்கை விவசாயத்தில் இணைவோம் எனும் தொணிப் பொருளில் விவசாயிகளை விழிப்பூட்டும் வகையில் விவசாயத் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் வீதி நாடகம் ஒன்று செவ்வாய் கிழமை மாலை (26) மட்டக்களப்பு - களுதாவளை ஸ்ரீ முருகன் ஆலய மன்றலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு விவசாயிகள் மத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்….
செயற்கை விவசாய இரசாயனங்களைப் பயன்படுத்தி விவசாய உற்பத்திகளை விளைகிக்கும்போது அந்த உணவு உற்பத்திகளில் நஞ்சுத் தன்மைகள் கலந்திருப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டி நிற்கிறன. இவற்றையெல்லம் கருத்தில் கொண்டு எமது எதிர்கால சந்ததியினர் தேக அரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்பதற்காகவும், இனிமேலாவது இயற்கை விவயாயத்தை எமது விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும்.
இயற்கை உரவகைகளை, இயற்கை கிருமி நாசினிகள் போன்றவற்றைப் பயன்படுத்தி விவசாய செய்கைகளில் ஈடுபடும்போது எந்தவித பக்கவிளைவற்ற உணவுகளை நாம் அனைவரும் உண்டு நோயின்றி நீண்டகாலம் வாழலாம். இதற்கு விவசாயத் திணைக்களம் எடுத்துள்ள முயற்சி வரவேற்கத் தக்கதாகும்.
கடந்த காலங்களில் எமது மூதாதையர்கள், விவசாயத்திற்கு எந்தவிதமாக செயற்கை முறையிலான உரவகைகளோ, கிருமிநாசினி வகைகளையோ பயன்படுத்த வில்லை ஆனால் தற்போது இவ்வாறான செயற்கை உரவகைகளைப் பயப்படுத்தி விவசாயம் மேற்கொள்வதனால் தற்போது மக்கள் மத்தியில் பல நோய்த் தாக்கங்களும், ஊடுருவியுள்ளன. இவற்றால் சிறு குழந்தைகள்முதல் பெரியவர்கள் வரைக்கும் பாதிக்கப் பட்டுள்ளார்கள்.
எனவே மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை இயற்கைப் பசளை உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலை ஒன்றினை களுவாஞ்சிகுடி கடற்கரையில் கடந்த மாதம் முதல் ஆரம்பிக்கப் படப்டுள்ளது இனிமேல் இப்பகுதிவாழ் விவசாயிகள் அனைவரும் அங்கு சென்று இயற்கை உரங்களைப் கொள்வனவு செய்து விவசாய உற்பதியில் ஈடுபட்டு நோயற்ற உணவு உற்பத்திகனை மேற்கொள்ளலாம். என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment