2015 ஆம் ஆண்டுக்கான மாகாண மட்ட உடற்பயிற்சிப் போட்டியில் மட்.கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. வலய மட்ட உடற்பயிற்சிப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று இப்பாடசாலை மாகாண மட்ட போட்டிக்கு தெரிவாகி இருந்த நிலையில், கடந்த திங்கட் கிழமை (25) மட்.கோட்டமுனை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மாகாண மட்ட (கிழக்கு மாகாணம்) உடற்பயிற்சிப் போட்டியிலும் இப் பாடசாலை முதலாம் இடத்தைப் பிடித்து சாதனை வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
இப்பாடசாலை மாணவர்கள் முதல் தடவையாக உடற்பயிற்சிப் போட்டியில் கலந்துகொண்டு சாதனை ஈட்டியுள்ளமை மிகவும் பெருமைக்குரிய விடயமாகும் மேலும் இப் பாடசாலையின் அதிபர் திருமதி ரி.அருட்ஜோதியின் வழிகாட்டுதலின் கீழ் ஆசிரியர் அல்பிரின் யேசு சகாயத்தின் நெறிப்படுத்தலினாலேயே இம் மாணவர்கள் இச்சாதனையை ஈட்டியுள்ளார்கள் என்பது குறிப்பிடத் தக்கதாகும
0 Comments:
Post a Comment