சீவல் தொழிலாளர்களின் கள் களவாடப்பட்டு வருவதாக சீவல் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரிவிக்கப் படுவதாவது….
மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளைப் பகுதியில் சீவல் தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் தொன்னை மரங்களிலிருந்த கள் முட்டிகள் உடைக்கப்பட்டு கள் மற்றும், தேங்காய்களும், புதன்கிழமை (20) இரவு களவாடப் பட்டுள்ளதாக சீவல் தொழிலாளர்கள் தெரிவிக்கின்னறர்.
சுமார் 20 தென்னை மரங்களில் 10 கலனுக்கு மேற்பட்ட கள் களவாடப் படடுள்ளதோடு, கள் முட்டிகளும் உடைக்களப் பட்டுள்ளன.
இச்சம்பவம் இன்று நேற்றல்ல கடந்த ஒரு மாதகாலமாக இடையிடையே தமது ஜீவனோபாயத் தொழில் இனந்தெரியாதவர்களால் இரவில் களவாடப்பட்டு வருவதாகவும், களுதாவளைப் பிரதேச சீவல் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment