பார்கொண்ட மதுரை மாநகர் தனிலே திரு பாண்டியன் காண ஒரு மாவடுவதாகி - ஏர் கொண்ட அம்மன் அருளால் அந்தரத்தே எய்யாத மாங்கனியை எண்ணாமல் அவனும் - சீர் கொண்ட செங்கரம் நீட்டியதனாலயே திருவயம்பகத்தொன்றை மறையவே செய்த - நீர் கொண்ட வம்மி நிழல் நீடிவளர் அன்னமே நிகர் செட்டிபாளையம் நிறைந்த கண்ணகையே!
வேண்டுவோர் வினை தீர்க்க வேளமுகன் துணையிருக்க பார் புகழும் செட்டிபாளையம் பதியினிலே மதுரை மாநகர் எரித்து பத்தினிக் கோலம் பூண்டு தன்னை தஞ்சம் என்று சரண் அடைபவர்களைத் தன் ஆயிரம் கண்கொண்டு காத்திடும் எங்கள் சிலம்புச் செல்வி கண்ணகை அம்மனுக்கு வருடாந்த திருக்குளிர்த்திச் சடங்கு இன்று 29.05.2015 அன்று மிகவும் பக்தி பூர்வமான முறையில் ஆரம்பமாக உள்ளது . தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெறும்
இச்சடங்கானது கிரான்குளம்இகுருக்கள்மடம்இமாங்காடுஇதேற்றாத்தீவு, செட்டிபாளையம் இகளுதாவளை ஆகிய ஆறு ஊர்கள் சேர்ந்து பண்பாடு மாறாமல் மிகவும் பக்தி பூர்வமாக வழிபடுகின்றனர் . எம் தாயாரின் திருக்குளிர்த்திச் சடங்குதனைக் காண இலங்கையில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் கடல் கடந்து வாழும் பல அடியார்கள் வந்து வழிபடுவது வழக்கம் . ஆனால் சில அடியார்களுக்கு இவ் அழகிய திருக்கோலம் காணக்கிடைப்பதில்லை இருந்தும் அக்குறைதனைப் போக்க ஆலய நிர்வாக சபை
http://www.cheddiurkannaki.com/ எனும் இணையத்தளத்தினூடாக நேரலை வாயிலாகப் 31.05.2015 ஞாயிற்றுக்கிழமை முதல் 01.06.2015 திங்கள்கிழமை வரை பார்வையிடக்கூடிய வகையில் ஏற்பாடு செய்துள்ளனர் . இதன் மூலம் எம் மனக்கண்முன் தாயாரின் திருக்குளிர்த்திச் சடங்கினைக் காணக்கூடிய பாக்கியத்தினை சகல பக்தர்களும் கிடைக்கப் பெறுகின்றனர் . எம் கண்ணகைத்தாயாரை மனமுருக வேண்டி தாயாரின் அருள் பெற்றேகுமாறு அன்புடன் வேண்டி நிற்கின்றோம் .
0 Comments:
Post a Comment