கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சீபார்சிக்கு அமைவாக உருவாக்கப்பட்ட காணிப் பயன்பாட்டு திணைக்களத்தினால் காணிப் பயன்பாட்டு வரைபடம் தயாரிப்பதற்கான பங்காளர்களை தெளிவுபடுத்தும் கூட்டம் ஓன்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் செவ்வாய்க் கிழமை (19)ந டைபெற்றது.
பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் காணிப்பயன்பாட்டுத் திணைக்கள தலைமைக்காரியாலயத்தின் உதவிப்பணிப்பாளர் எம்.கிருபாமூர்த்திஇ மற்றும்இ காணிப்பயன்பாட்டுத் திணைக்களத்தின் மட்டக்களப்புஇ அம்பாரை மாவட்ட உதவியாணையாளர்
ஆகியோர் கலந்து கொண்டு இதற்கான விளக்கங்களை முன்வைத்தனர்
மேலும் இக் கூட்த்தில் வனலாக திணைக்களம் நீர்பாசன திணைக்களம் பிரதேச சபை காணி உத்தியோகத்தர்கள் கரையோரபாதுகாப்பு திணைக்களம் தென்னை அபிவிருத்திச் சபை போன்ற திணைக்களங்களை சார்ந்த உத்தியோகத்தர்கள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
தருசு நிலங்களை பயனுள்ள வகையில் எவ்வாறு பயன்படுத்தலாம் காணிக்கான பாதுகாப்பினை ஏற்படுத்தவது சம்மந்தமான விரிவான விளக்கங்கள் இதன்போது முன்வைக்கப் பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்
0 Comments:
Post a Comment