23 May 2015

சமூகமட்ட விபத்துக்களை குறைப்பதற்கான விழிப்பூட்டல் கருத்தரங்கு

SHARE

ஐரோப்பி ஒன்றியத்தின் நிதியுதவியுடன் சமூகமட்ட விபத்துக்களை குறைப்பதற்கான விழிப்பூட்டல் கருத்தரங்கு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முன்பள்ளி அசிரியர்களுக்கு செவ்வாய் கிழமை (09) பிரதேச செயலகத்தில் நடாத்தப்பட்டது.

பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் தலைமையில்இ பிரதேச பிரதேச செயலக முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. சி.அருந்ததி ஒழுக்கமைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி எஸ்.சத்தியகொளரி சர்வேதய அமைப்பின் திட்ட இணைப்பாளர்  கே.குமரேசன்  களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி டி.எம்.வியஜசுந்தர உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் களுவாஞ்சிகுடி ஆதாரவைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் ஜி.சுகுணன் வளவாளராகக் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கிளனார்.

இக் கருத்தரங்கில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 55 பாடசாலைகளில் இருந்து சுமார் 65 இக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்குபற்றியிருந்தனர்;. இதன் போது சமூகமட்டத்தில் ஏற்படகின்ற சாதாரண விபத்துக்களில் இருந்து குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது ஏற்படக்கூடிய சமூகமட்ட விபத்துக்கள் என்ன இதனை தவிர்த்துக் கொள்வதற்கான வழிவகைகள் மற்றும் விபத்தில் சிகிகய குழந்தைக்கான முதலுதவிகள் என்ன 
போன்ற பல விடயங்கள் இதன் போது வளவாளரால் முன்வைக்கப்பட்து.




SHARE

Author: verified_user

0 Comments: