மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் கீழ் செயற்படும் கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தினால் செயற்படுத்தப்படும் பங்கு பற்றலுடன் கூடிய நீடித்து நிலைக்கத்தக்க கரையோர வலய மீளமைப்பு நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் நெசட் வியாபார அபிவிருத்தி ஆலோசனை அமைப்புடன் இணைந்து நடைமுறைப் படுத்தப்படும் சிறு தொழில் முயற்சியாண்மை மற்றும் மாற்று வாழ்வாதார மார்க்கங்களை ஊக்குவித்தலுக்கான செயற்றிட்டத்தின் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் நடைபெற்றது.
பொத்துவில் பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் வியாழக்கிழமை (28) நெசட் அமைப்பின் கிழக்கு பிராந்திய இணைப்பாளர் செ.ரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.முசர்றத், கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் சமிர பெரேரா மற்றும் நெசட் அமைப்பின் தலைவர் துமிந்த விரசிங்க பிரதேச அபிவிருத்தி வங்கியின் பொத்துவில் கிளை முகாமையார் எம்.எல்.ஏ.சக்கூர் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் கிராம சேவை உத்தியோகஸ்தர்கள் தெரிவு செய்யப்பட்ட தொழில் முயற்சியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டர்.
இதில் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 15 தொழில் முயற்ச்சியாளர்களுக்கு 1350000 ரூபாய் நிதி பிரதேச அபிவிருத்தி வங்கியுடாக கடன் அடிப்படையில் வழங்கி வைக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment