30 May 2015

கிராமமட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுக்கள் மிகவும் பொறுப்பு வாய்ந்தவை – த.வசந்தராஜா

SHARE

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள அனர்த்த முகாமைத்துவ பிரதான குழுக்களும் அவற்றின் கீழ் இயங்கிவருகின்ற முதலுதவிக்குழு முதலான உபகுழுக்களும் மிகவும் பொறுப்பு வாய்ந்தவை. அக்குழுக்கள் ஒவ்வொன்றும் தங்கள் பொறுப்புக்களை விளங்கிக் கொள்வதோடு அப்பொறுப்புக்களை நிறைவேற்றக்கூடிய இயலுமையையும் பெற்றுக் கொள்ளுதல்; வேண்டும். என இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் தலைவர் த.வசந்தராஜா தெரிவித்தார்.

அரசசார்பற்ற அமைப்புக்களான வேர்ள்ட் விஷன், அக்ரட் ஆகியவை இணைந்து வெல்லாவெளிப் பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தி வரும் வாழ்வாதார செயற்பாடுகளுக்கான அனர்த்த முகாமைத்துவப் பொறிமுறை நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமாக அனர்த்த முகாமைத்துவ உபகுழுக்களில் ஒன்றான முதலுதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்டு வரும்  முதலுதவிப்பயிற்சி வகுப்பொன்றை காக்காச்சிவட்டை சுகாதார நிலையத்தில் வெள்ளிக் கிழமை (29) ஆரம்பித்து வைத்துப் பேசுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அக்ரட் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் இ. கஜேந்திரனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்பயிற்சி வகுப்பில் பாலயடிவெட்டை, காக்காச்சிவெட்டை, நெல்லிக்காடு, கண்ணபுரம் மேற்கு, பலாச்சோலை ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த 33 முதலுதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் பௌதீகரீதியான அபிவிருத்திகளை விட மனிதவள அபிவிருத்தியே சமூகத்தை நிலைபேறானதாக வைத்துக் கொள்ள உதவும். எவ்வளவுதான் பௌதீகரீதியான அபிவிருத்திகள் இடம்பெற்றாலும் மக்களிடையே அறிவும் திறனும் வளர்க்கப்படவில்லை என்றால் அதாவது தங்களிடையே உள்ள அபாயங்களை மக்கள் அடையாளம் காணவும், அவற்றின் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை அல்லது விளைவுகளை அவர்கள் மதிப்பீடு செய்யவும், அவ்வாபத்துக்களை அவர்களே குறைத்துக் கொள்ளவும்,  ஏற்ற அறிவையும் திறனையும் மக்கள் பெற்றுக் கொள்ளாதவரை நிலையான அபிவிருத்தியை மக்களிடையே ஏற்படுத்த முடியாது என்றார்.

இதில்  இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த ச.கணேசலிங்கம், செ.நிவேஷன் ஆகியோர் முதலுதவிப் பயிற்றுனர்களாக செயற்பட்டனர். 





SHARE

Author: verified_user

0 Comments: