23 May 2015

புங்குடுதீவு மாணவி கொலைக்கு மட்.களுதாவளை பாடசாலை மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

SHARE
யாழ் புங்குடுதீவில் கடந்த புதன் கிழமை பாடசாலை மாணவி ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று புதன் கிழமை (20) காலை மட்.களுதாவளை மகாவித்தியாலய பாடசாலை மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்.களுதாவளை மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாடசாலை அதிபர், ஆசிரியர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

நவீன காலத்திலும் பெண்களுக்கு அடக்குமுறையா?  அடக்கு முறைக்கு எதிராக குரல் கொடுப்போம்! பெண்களுக்கு எதிரான வன்முறையில்லா புது உலகம் வேண்டும்! , வித்தியாவின் நிலை மீண்டும் ஒரு மாணவிக்கு வேண்டாம், மனித விலங்குகளே! உங்களுக்கு மனச்சாட்சியே இல்லையா? , நீதிதேவதையே உன் விழிகளைத் திறந்து பார், பாடசாலை மாணவர்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்து! , நீதி தேவதையே கண்களைத் திறந்து எரித்துவிடு அந்த காம வெறியன்களை, குற்றவாளிகள் மிகக் கொடூரமாகாத் தண்டிக்கப்பட்ட வேண்டும், வித்தியாவிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள், போன்ற பல வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு மாணவர்கள் ஏர்ப்பாடத்தில் ஈடுபட்டனர்.










SHARE

Author: verified_user

0 Comments: