ரோஸன்-
சம்பூர் மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்வதற்கென கிழக்கு மாகாண கல்வி மற்றும் மீள் குடியேற்ற அமைச்சர் சி.தண்டாயுதபாணி தலைமையில் இன்று 22.05.2015 சம்பூர் அபிவிருத்தி குழு ஒன்று நிறுவப்பட்டுள்ளது.இக் கூட்டத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகட் அவர்களும் கிழக்கு மாகாண சபைக்கு உட்பட்ட சகல திணைக்களங்களின் உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இதன் போது உரையாற்றிய கல்வி மற்றும் மீள் குடியேற்ற அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.மத்திய அரசை விடவும் மாகாணசபையும் அதன் திணைக்கங்களும் அற்பனிப்புடன் விரைந்து செயற்பட்டு சம்பூர் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து அவர்களை குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியது அணைவரின் தார்மீக கடமையாகும் .
மேலும் இவர்களுடைய வீடமைப்பு மற்றும் வாழ்வாதாரம் மற்றும் கல்வி தேவையே இன்று முன்னுரிமையில் உள்ளது. இதற்கான முன்னேடுப்புக்களை உடனடியாக நாம் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
எனவே உடனடியாக ஒரு வார காலத்துக்குள் அணைத்து திணைக்கள அதிகாரிகளும் சம்பூருக்கு நேரடியாக சென்று அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடி அவர்களுடைய தேவைகளை அடையாளப்படுத்தி சம்பூர் தொடர்பான ஒவ்வொரு திணைக்களங்களும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பான திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுருத்தல் வழங்கப்பட்டது.
மேலும் இதன் போது இந்த சம்பூர் காணியை மீட்டு மக்களுக்கு வழங்க பெரும் முயற்சி எடுத்த கூட்டமைப்பின் தலைவர் இரா .சம்மந்தன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின்பெனான்டோ ஆகியோருக்கு இதன் போது விசேடமான நன்றிணை தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment