கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட வரோதயநகர் கிராமத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த தையல் பயிற்சி நெறியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றுதல் வழங்கும் நிகழ்வும் கண்காட்சியும் 16.05.2015 அன்று வரோதயநகர் பாரதி வித்தியாலயத்தில் இடம் பெற்றது.
இந்நிகழ்விற்கு அதிதிகளாக கிழக்கு மாகாணசபையின் உறுப்பினர் ஜெ.ஜெனார்தனன் மற்றும் கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் அருந்தவராஜா திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ் ஆகியோர் உட்பட பல அதிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெ.ஜெனார்தனன் உரையாற்றும் போது கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மிக சிறப்பாக இயங்க வேண்டுமானால் அவற்றில் அதிகமாக இளைஞர்கள் உள்வாங்கப்பட வேண்ண்டியது அவசியம் மேலும் திருகோணமலை மாவட்டத்தில் அதிகமான கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் மாதர் கிராம அபிவித்தி சங்கங்கள் புனரமைக்கப்படால் உள்ளது இவை புனரமைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment