(ஏ.எல்.எம்.சினாஸ்)
காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு கடந்த திங்கள்(06.04.2015) , செவ்வாய்(07.04.2015) ஆகிய இரு தினங்களும் கல்முனையில் சாட்சியங்களை பதிவு செய்து கொண்டது. கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இந்த விசாரணையில் காணாமல் போனோரின் உறவினர்கள் சாட்சியமளித்தார்கள். அம்பாறை மாவட்டத்தின் தமிழ்-முஸ்லிம் பிரதேசங்களை சேர்ந்த காணாமல் போனோரின் உறவினர்கள் பலர் இங்கு கண்ணீர் மல்க சாட்சியமளித்தார்கள்.
இதே நேரம் காணாமல் போனோரை விசாரணை செய்யும் இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் எமக்கு நம்பிக்கையில்லை, சர்வதேச விசாரணை தேவை என்ற கோரிக்கைகளை முன்வைத்து காணாமல் போனோரின் உறவினர்கள் பலர் விசாரணை நடைபெற்ற இரண்டு தினங்களும் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திற்கு முன்னால் எதிர்பை வெளிக்காட்டி கவனயீர்ப்பு போராட்டம் நடாத்தியமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment