13 Apr 2015

திருமுறை மாநாடு

SHARE
இந்து கலாசார திணைக்களமும், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை இணைந்து நடாத்திய திருமுறை மாநாடு இன்று செவ்வாய் கிழமை (07) இந்து கலாசார திணைக்களத்தின் மட்டக்களப்பு அலுவலகத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இந்தியாவின் தமிழ் நாட்டிலிருந்து, திருப்பனந்தாள் ஆதீனம் காத்தித்திருமடத்தின் இணை அதிபர் தவத்திரு சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள், தமிழக பேராசிரியர் அரங்க ராமலிங்கம், போராசியரியர் சிவகுமார், கலைமாமணி திருத்தணி சுவாமிநாதன் ஆயியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் மட்டக்களப்பு கல்லடி காயத்திரி பீடத்தைச் சேர்ந்த சாம்பசிவம் சிவாச்சாரியார், போராசிரியர் சீ.பத்மநாதன், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.தங்கேஸ்வரி, கிழக்குப் பல்கலைக் கழக விரிவுரையாளர் பாலகைலாசநாதசர்மா, உட்பட பாடசாலை மாணவர்கள், அதிபர் ஆசிரியர்கள், அறநெறிப் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது, அறக் கருத்துக்கள், இந்துசமய நொற்பொழிவுகள், திருமுறையின் மகத்துவம் போன்ற பல இந்து தத்துவ விடையங்களில் விளக்கங்களும் அருளுரைகளும், இடம்பெற்றன.

தமிழ் நாட்டிலிருந்து வந்து கலந்து கொண்ட திருப்பனந்தாள் ஆதீனம் காத்தித்திருமடத்தின் இணை அதிபர் தவத்திரு சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிக்கு பாத பூஜை நடாத்தப்பட்டு ஆசீர்வாதமும் வழங்கப்ட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.















SHARE

Author: verified_user

0 Comments: