மட்டக்களப்பு
மாவட்டத்தில் வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சினால் 100 நாள்
வேலைத்திட்டத்திட்டதின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் வீட்டுக்கு வீடு
கிராமத்துக்குக்கிராமம் அபிவிருத்தி திட்டம் தொடர்பாக இறுதி தீர்மானம்
எடுக்கும் கலந்துரையாடல் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட
அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற
இக்கலந்துரையாடலில் 15000 கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
இக்
கலந்துரையாடலின் போது, 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும்
நடைமுறைப்படுத்தப்பட வுள்ள அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பில்
கலந்துரையாடப்பட்டது.
இத்
திட்டத்தின் கீழ் வீதி அபிவிருத்தி, மைதானங்கள:, பொதுக்கட்டடங்கள்,
உட்கட்டமைப்பு அபிவிருத்திகள், நீர்ப்பாசன வடிகாலமைப்புகள் உள்ளிட்ட
பல்வேறு அபிவிருத்திகள் மக்கள் நலன் சார்ந்து மேற்கொள்ளப்படவுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
வீட்டுக்கு
வீடு கிராமத்துக்குக்கிராமம் 15000 கிராமங்களை மேம்படுத்தும்
வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 358 திட்டங்கள் 345
மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.
இதில்
வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எம்.அமீர் அலி,
பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,சீ யோகேஸ்வரன், கிழக்கு மாகாண
விவசாய அமைச்சர் க.துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான
ஆர்.துரைரெட்ணம், இந்திரகுமார் பிரசன்னா, கிருஸ்ணப்பிள்ளை, எம்.நடராஜா,
வீடமைப்பு - சமுர்த்தி அமைச்சின் பணிப்பாளர் அப்துல் வஹாப்தீன், மாவட்ட
திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், பிரதேச செயலாளர்கள்,பிரதேச
சபைகளின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள்
உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment