தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு
மாவட்டத்தைச் சேர்ந்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரனின்
விடுதலை இல்லம் என்னும் பொது மக்கள் தொடர்பகம் இன்று சனிக் கிழமை (25)
மட்டக்களப்பு ஒலிவ் லேனில் திறந்த வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வட மாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான, பொன். செல்வராசா பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான பி.இந்திரகுமார், மா.நடராசா, இராஜேஸ்வரன் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment