மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்/பட்/திருப்பழுகாமம் விபுலானந்த வித்தியாலயத்தில் நேற்று 25.04.2015 அன்று வித்தியாலய அதிபரின் தலைமையின் கீழ் 137வது ஆண்டு நிறைவு விழா இடம்பெற்றது. இவ்விழாவில் பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண சபை கல்வி கலாசாரம் விளையாட்டுத்துறை மற்றும் புனநிர்மாண அமைச்சர் கௌரவ.எஸ். தண்டாயுதபாணி அவர்களும் கிழக்கு மாகாண சபை விவசாயம் நீர்ப்பாசணம் கூட்டுறவு கால்நடை மீன்பிடி உணவு வழங்கல் மற்றும் ஊழியர் ஆணைக்குழு அமைச்சர் கௌரவ.கி.துரைராசசிங்கம் அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன் சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ.ஞா.கிருஷ்ணபிள்ளை அவர்களும் மற்றும் கல்வி அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தார்கள்.
கட்டிடத்திறப்பு விழாவும் இடம்பெற்றது. கல்வி அமைச்சின் TESP விசேட நிதி ஒதுக்கிட்டின் கீழ் 5.6மில்லியன் பெறுமதியான கட்டிடம் கல்வி அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலையின் வரலாற்றினையும் பழுகாமத்தின் வரலாற்றினையும் கூறும் வகையில் "அறிவுப்பூங்கா'' எனும் நூல் வெளியிடப்பட்டது. இதற்கான நயவுரையினை மட் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் திரு பொ.தவநாயகம் அவர்கள் வழங்கினார்.
முன்னாள் அதிபர்களை கௌரவிக்கும் முகாமாக பாடசாலையில் சேவையாற்றி இளைப்பாறிய அதிபர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
0 Comments:
Post a Comment