இனவாதம் பேசிப் பேசியே இந்த நாட்டை குட்டிச்சுவர் ஆக்குகின்றார்கள். சிங்கப்பூராக இருக்க வேண்டிய எமது இலங்கைத் திரு நாடு எங்கேயோ பின்நோக்கி நிற்கின்றது. தற்போது நாடாளுமன்றத்தில் நியாயப்படி எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயாதான் நியமிக்கப்பட வேண்டும். அதைக்கூட இந்த இனவாதிகளால் ஏற்றுக்கொள்ள முடியாமலுள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாமலுள்ள இனவாதம் பேசுவோருக்கும், இனவாதமாக எல்லாவற்றையும் சிந்திப்போருக்கும், இந்த நாட்டை ஆண்ட பரம்பரை எமது தமிழ் பரம்பரையே! என்பதையும் இந்த் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர். ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை (வெள்ளிமலை) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நிலவும் எதிர்க் கட்சித் தலைவர் பதவி தொடர்பில் மேற்படி மாகாணசபை உறுப்பினரிடம் வெள்ளிக்கிழமை (10) தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்….
இலங்கைத் திருநாட்டில் தற்போது நிலவுகின்ற ஒரு விடயம் எதிர்க்கட்சித் தலைவராக யார் வரவேண்டும்? யார் வருவார் என்ற ஒரு வினா உலகலாவிய ரீதியில் எழுகின்ற வேளையில் எமது மதிப்பிற்குரிய தலைவர் சம்பந்தன் ஐயா அவர்களின் பெயர் நாமமும் பேசப்படுகின்றது. இலங்கை சட்டதிட்டங்களுக்கு அமைவாக அந்த எதிர்க் கட்சித் தலைவர் பதவி மதிப்பிற்குரிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா அவர்களுக்கே வழங்க வேண்டியிருக்கின்ற வேளையில் இந்த நாட்டின் பெரும்பாண்மை இனத்தைச் சேர்ந்த இந்த நாட்டை மேலும் படு பாதாளத்திற்கு தள்ள வேண்டும் என்றதொரு சிந்தனையாளர்கள். அதை மறுத்து பலவாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
அப்படிப்பட்டவர்கள் ஒன்றை ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். எமது மதிப்பிற்குரிய முள்ளான் தலைவர் அமரர் அமிர்தலிங்கம் கடந்த 1977 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எதிர்க்கட்சித் தலைவராக இலங்கை நாடாளுமன்றில் திகழ்ந்ததையும் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். இந்த நாட்டை ஆண்ட பரம்பரையைச் சேர்ந்தவர்கள் தமிழர்கள் என்பதையும் பேரினவாதிகளுக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். அதற்கு மேலாக நமது நாடு முன்னேற வேண்டுமாயின் கடந்த கால கசப்புணர்வுகள் அனைத்தையும் மறப்போம், மன்னிப்போம், என அயல் நாடான இந்தியாவை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டுமென இந்த இனவாதிகளிடம் வேண்டுகோள் விடுக்க விரும்புகின்றேன்.
எத்தனை கோடி மனிதர்கள் இந்தியாவில் வாழ்கின்றார்கள். எத்தனை சமயம் அங்கே இருக்கின்றது. எத்தனை மொழி பேசுகின்றார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் இந்தியன் என்ற உணர்வோடு வாழுகின்றார்கள். நமது நாட்டிற்கு மட்டுமல்லாது உலக நாட்டிற்கும் முன்னுதாரணமாக அனைவரும் பாராட்டத்தக்க வகையில் திகழ்கின்றது. ஆனால் நமது நாட்டிலே நான் சிங்களவன் நான் தமிழன் நாம் இஸ்லாமிய இனத்தவர் என்றெல்லாம் பிரிவினைவாதம் பேசிப்பேசியே நமது நாடு இந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டது. இல்லது போனால் சிங்கப்ப+ர், யப்பான் போன்ற நாடுகளைவிட ஒரு முன்னேறிய நாடாக நமது இலங்கை நாடு மறுமலர்ச்சி அடைந்திருக்கும்.
நான் அவர்களைப் பார்த்து ஒரு வேண்டுகோள் விடுக்க விரும்புகின்றேன். நாம் அனைவரும் இலங்கையர் என்ற உணர்வோடும் இலங்கை மாதா பெற்ற மக்கள் என்ற உணர்வோடும், எதிர் வருகின்ற காலத்தில் நாட்டையும் நாட்டு மக்களையும் கட்டிக் காப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன்.
இந்தியாவிலே சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த சீக்கியர் பிரதமராக வர முடியுமாக இருந்தால். இந்தியா நாட்டின் ஜனாதிபதியாக இஸ்லாமிய இனத்தை சேர்ந்த ஒருவர் வர முடியுமாக இருந்தால். அமெரிக்காவிலே கறுப்பினத்தை சேர்ந்த பராக் ஒபாமா ஜனாதிபதியாக வர முடியுமாக இருந்தால். சவுத்தாபிரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த நெல்சன் மண்டேலா ஜனாதிபதியாக வர முடியுமாக இருந்தால். மேற்குறிப்பிட்ட சிறுபாண்மை இனத்தவர்கள் தலைவர்களாக வந்ததனால்த்தான் இன மத வேறுபாடற்ற ஒற்றுமை அங்கே திகழ்ந்தது.
நான் கூறிய நாடுகள் அனைத்தும் பெயரும் புகளோடும் மதிக்கக் கூடிய பலராலும் போற்றக்கூடிய நாடாக மறுமலர்ச்சி அடைந்திருப்பதை யாராலும் மறக்கவோ, மறுக்கவோ, முடியாது.
ஏன் அப்படியானதொரு சுழ்நிலையை நாம் உருவாக்க முடியாது என இந்த நாட்டின் அனைத்து இன தலைவர்களையும் பார்த்து இலங்கை வாழ் அனைத்து மக்களின் சார்பாகவும் அறைகூவல் விடுக்கின்றேன்.
மேற்குறித்த நாட்டில் எல்லாம் சிறுபாண்மையினத்தவர்கள் தலைவர்களாக வர முடியுமாக இருந்தால் ஏன் இந்த இலங்கைத் திருநாட்டில் தமிழினத்தின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயா எதித்க்கட்சித் தலைவராக வரமுடியாது. நான் இந்த இலங்கை மாதாவை நேசிக்கின்றவன் என்ற வகையில் அனைத்து தலைவர்களிடமும் இந்த வேண்டுகோளை முன்வைக்கின்றேன். இந்த வேண்டுகோளை இலங்கை மாதாவை நேசிக்கின்ற அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என நினைக்கின்றேன். என அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment