12 Mar 2015

வடமாண முதலமைச்சரை விமர்சிப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவுக்கு அருகதை கிடையாது - அரியநேத்திரன்.

SHARE
வடமாண முதலமைச்சரை விமர்சிப்பதற்கு பிரதமர் ரணில்விக்கிரமசிங்காவுக்கு அருகதை கிடையாது  தமழீழ விடுதலைப் புலிகளை பிரித்தவர் என்பதனால்தான் இதனை நான் கூறுகின்றேன் எல்லவிடயங்களையும் பகிரங்கமாகக் கூறுவதில் எப்போதும் நான் தயங்கப்போவதில்லை என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டடம்  மகிழூர் சரஸ்வதி வித்தியாலய விளையாட்டு விழா திங்கட் கிழமை (09) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்….

மாணவர்கள் விளையாட்டில் காட்டும் அதே அக்கறையை கல்வி கற்பதிலும் காட்டவேண்டும் மாணவர்கள் எதிர்காலத்தில் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். ஆனால் தற்போதைய காலத்தில் மாணவர்கள் கூடுதலான நாட்டத்தை கலைத்துறையில் காட்டுவதனை  விடுத்து ஏனைய துறையில் காட்டுவீர்களானால்  வேலைவாய்ப்பிற்காக அரசாங்கத்திடம் கெஞ்சி போராட்டம் நடாத்த வேண்டிய அவசியம் இல்லை.

உண்மையில் ஆட்சி மாறியிருக்கின்றது தமிழ் மக்களின் நில ஆக்கிரமிப்புக்கள் திட்டமிட்ட செயல்கள் மாறி இருக்கின்றதா என்பது கேள்விக்குறிதான் இந்த அரசாங்கம் என்பது இன்னொரு தேர்தலினை இலக்குவைத்து செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றது. எனவே அடுத்ததோர் தேர்தல் வந்தால் இந்த பட்டிருப்புத்தொகுதி மக்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதனை இந்த வேளையில் நீங்கள் அறிந்திருப்பீர்கள் எனவே யாவரும் சிந்தித்து செயற்பட வேண்டும்.

கடந்தகாலங்களில் நாங்கள் பகுதி நேர அரசியலையே நாங்கள் செய்து வந்தோம் 2009 ஆம் ஆண்டிற்கு பிற்பாடுதான் நாங்கள் முழு நேர அரசியலை செய்கின்றோம். இதற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளே முழு நேர அரசியல் செய்து வந்தார்கள். 2009 ஆண்டு முள்ளிவாய்க்கால் போருக்கு பின்னர் தமிழ் மக்கள் மத்தியில் முழு நேர அரசியல் செய்வதற்கு யாரும் இல்லை என நினைத்தனர், அனால் அதனை உடைத்தெறிந்து நாங்கள் தற்போது அரசியல் பணி செய்து வருகின்றோம். இந்த அரசியல் செய்வதற்காக நாங்கள் எட்டு பரீட்சைகளை எழுதியுள்ளோம், அதில் நாங்கள் சித்தியடைந்துள்ளோம். என்ன பரீடசை எழுதியுள்ளீர்கள் என நீங்கள் கேட்கலாம் கூறுகின்றேன் எட்டுத் தேர்தல்களில் நாங்கள் வெற்றியடைந்தே இந்த அரசியல்பணி செய்யது வருகின்றோம்.

இதனால்தான் தமிழ் மக்களின் வாக்குப்பலத்துடன் தீர்வுக்காக ஐ.நா சபையின் கதவினைத் தட்டிக் கொண்டு இருக்கின்றோம். அனால் இன்னும் அது திறபடவில்லை! அதனை திறந்து நாங்கள் தீர்வினை எடுக்க வேண்டுமாக இருந்தால் மக்களாகிய நீங்கள் எங்கள் பின்னால் அணிதிரள வேண்டும். இதனை திறப்பதற்கு நீங்கள் தமிழ்த் தேசியக் கூட்டைமப்புக்கு வாக்ளிக்க வேண்டும் எனவே  திறக்க வைப்பதற்கான தகுதி மக்களின் கையில்தான் இருக்கின்றது.

ஐ.நா சபையின் கதவினைத் திறக்கவிடக் கூடாது என்பதற்காக பல சதிகள் இடம் பெற்று வருகின்றது. குறிப்பாக இந்த ஐக்கிய தேசியக்கட்சி என்ற ஒருகட்சி வருகின்றது ஏற்கனவே பொதுஜன ஐக்கிய முன்னணி என்ற கட்சி வந்தது,  சிறிலங்க சுதந்திரக்கட்சி என்ற ஒன்றும், வந்தது எல்லாமே சிங்களக் கட்சிகள்தான். இதன் பிரகாரம் தற்போது இருக்கக் கூடிய ஜக்கிய தேசியக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சிதைக்கப் போகின்றதா என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியிலே உலாவிக்கொண்டு இருக்கின்றது.
காரணம் வடமாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை மிக மோசமாக பிரமதர் ரணில் விக்கிரமசிங்க விமர்சித்து இருக்கின்றார.; இதனை விமர்சிப்பதற்கு ரணில் விக்ரமசிங்காவுக்கு எந்த அருகதையுமில்லை ஏனென்றால் தமிழீழ விடுதலைப் புலிகளை ரணில் விக்கிரம சிங்கவே திட்டமிட்டு பிரித்தவர் என்பதனால்தான் நான் இதனைக் கூறுகின்றேன். எல்லா விடயங்களை நான் பகிரங்கமாகக் கூறுவதில் எப்போதும் நான் தயங்கப்போவதில்லை எனவே இவ்வாறான சதிகாரர்களிடம் இருந்து நாங்கள் தப்பவேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்ற முடிவை எமது மக்கள்தான் எடுக்க வேண்டும்.

தமிழத் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்கின்றவர்கள் கறுத்தக் கண்ணாடி போட்டு விமர்சிக்க வேண்டாம் எல்லாம் கறுப்பாதத்தான் தெரியும். இது யார் என்பதும் உங்களுக்குத் தெரியும் இதற்கு எல்லாம் நீங்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு மத்தியில் தமிழினமான நாம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் என்பதனை புரிந்து கொண்டு எதிர்காலத்தில் எமது மக்கள் செயற்படவேண்டும் என்பதனை மக்களாகிய உங்களிடம் நான் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: