12 Mar 2015

வெளி மாவட்ட மீனவர்களின் பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு

SHARE
வெளி மாவட்ட மீனவர் திருகோணமலைக்கு வந்த மீன்பிடியில் ஈடுபடுவதால் உள்ளுர் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவது தொடர்பாக மாவட்ட மீனவர் சங்கங்களின் அமைப்பால் தொடர்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த எதிர்ப்பிற்கும் பேச்சுவார்த்தைக்கும் நிரந்தர தீர்வு ஒன்று எட்டப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக கடந்த 11ம் திகதி புதன் கிழமை குச்சவெளி பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற பேச்சு வார்த்தையின் போது இதில் கலந்துகொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் மற்றும் பிரதி போக்குவரத்து அமைச்சர் எம்.எஸ் தௌபிக் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஏ.புஸ்பக்குமார மற்றும் குச்சவெளி பிரதேச செயலாளர் தயாபரன் ஆகியோருடன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெ.ஜெனார்தனன் மற்றும் அன்வர் ஆகியோருடன் மீனவர் சங்கதலைவர்கள்¸ மீன்பிடி முதலாளிமார்கள் உடன் நடைபெற்ற கலந்துரையாடல்களின் முடிவாக பின்வரும் தீர்மானம் எட்டப்பட்டது.

தற்போது வெளிமாவட்ட மீனவர்களால்  தரித்து வைக்கப்பட்டுள்ள 38 மீன்பிடி படகுகளுடன் திருகோணமலை பொலிசில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 10 மீன்பிடிப் படகுகளும் சேர்த்து  மொத்தமாக வெளிமாவட்டங்களுக்கான 48 மீன்பிடி படகுகள் இவ்வாண்டு இறுதிவரை மட்டும் மீன்பிடிப்பதற்கு அனுமதிக்கப்படும். இதன் பின்னர் எந்தவொரு வெளிமாவட்ட மீன்பிடிப் படகுகளும்  இம்மாவட்டத்தில் மீன்பிடிப்பதற்கு அனுமதிக்கப்படாது என்பதை  உங்களுக்கு உறுதிப்படுத்துகின்றேன்.என கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் மற்றும் பிரதி போக்குவரத்து அமைச்சர் எம்.எஸ் தௌபிக் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஏ.புஸ்பக்குமார மற்றும் குச்சவெளி பிரதேச செயலாளர் தயாபரன் ஆகியோர் தனித்தனியாக எழுத்த மூலமான கடிதங்களை மீனவர் சங்க பிரதிநிதிகளிடம் கையளித்து இந்த நிலைமையை சுமூகமாக தீர்த்து வைத்துள்ளனர்.

இத்தீர்மானம் மூலம் இதுவரை திருகோணமலைக்கு வருகை தந்தள்ள வெளி மாவட்ட மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணமும் உள்ளுர் மீனவர்கள் பாதிக்காத வண்ணமும் திர்வு எட்டப்ட்டள்ளது .என மீனவர் சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர் .

மேலும் கடந்த ஆண்டுகளில் திருகோணமலை மாவட்டத்தில் ஏறத்தாள 1000 வெளி மாவட்ட படகுகள் மீன்பிடியில் ஈடபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.









SHARE

Author: verified_user

0 Comments: