மட்டக்களப்பு
மாவட்டத்தில் மாவட்ட செயலகத்துடன் இணைந்து யு.எஸ்.எயிட் (USAID)
நிறுவனத்தின் நிதியுதவியில் பாம் நிறுவனத்தால் (Palm Community
Development) நடைமுறைப்படுத்தப்படும் வெள்ள மீட்சிக்கான வேலைத்திட்டத்தின்
ஆரம்ப கூட்டம் இன்று (19) மட்டு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச்
செயலாளருமான திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த
நிகழ்வில் யூ.எஸ்.எயிட் (USAID) இன் இலங்கைக்கான பிரதிநிதி திருமதி பியுமா
வோங், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், அனர்த்த முகாமைத்துவ
அலகின் உதவிப்பணிப்பாளர் எஸ்.இன்பராஜன், பாம் நிறுவனத்தின் பணிப்பாளர்
சுனில் டொம்பேபொல உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று
பிரதேச செயலாளர் பிரிவில் 13 மில்லியன் (130 லட்சம்) செலவில் நடைமுறைப்
படுத்தப்படவுள்ள இந்தத்திட்டத்தில் 100 குடும்பங்களுக்கு வாழ்வாதார
மேம்பாட்டு உதவிகள் வழங்கல், வெள்ளத்தால் பாதிக்கப்படும் வீதி ஒன்றுக்கு
கல்வெட் அமைத்தல், 1000 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புக்கள் வழங்கல்,
1000 கிணறுகள் சுத்திகரித்தல் என்பன மேற்கொள்ளப்படவுள்ளன.
இத்திட்டத்தில் வெள்ளத்தால் வருடா வருடம் பாதிக்கப்படும் மக்கள் பயன்பெறவுள்ளனர். இம்மாதம் முதல் இவ்வருட இறுதிவரை 8 மாதங்களுக்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்த வெள்ள மீட்சி வேலைத்திட்டத்தில் 2300 குடும்பங்கள் பயன்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments:
Post a Comment