காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் குருக்கள்மடம் ஐயனார் ஆலயத்திற்கு
முன்பாக திங்டக் கிழமை (16) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலத்த
காயங்களுக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்
பட்டுள்ளதாக, காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
சாய்ந்தமருதிலிருந்து வாழைச்சேனை நோக்கிச் மீன்களை ஏற்றிக் கொண்டு சென்றிருந்த முச்சக்கர வண்டிஒன்றுறே வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியதனாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் சாய்ந்தமருதைச் சேர்ந்த முகமட் இஸ்மயில் என்ற முச்சக்கர வண்டி சாரத்திய படுகாயமடைந்துள்ளார். இவ்விபத்து தொடர்பில் காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை முன்நெடுத்து வருகின்றனர்.
0 Comments:
Post a Comment