18 Mar 2015

ஆரையம்பதியில் உலக நாச்சியின் சிலை உடைப்பு.

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் ஆரையம்பதி கோவில்குளம் பழைய கல்முனை வீதியில் அமைக்கப்பட்டிருந்த கிழக்கின் முதல் பெண் சிற்றரசியான  உலக நாச்சியின் சிலை ஞாயிற்றுக்கிழமை (15) இரவு இனந் தெரியாதோரால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெரியவருவதாவது….

கிழக்கின் முதற் பெண் சிற்றரசியான உலக நாச்சி வாழ்ந்த இடமாக ஆரையம்பதி கோவில்குளம் சிகரம் பகுதியில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளருமாகிய பூ.பிரசாந்தன் தலைமையில் ஆரையம்பதி ஆலயங்களின் ஒன்றியம் ஆற்றல்பேரவை மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்கள் இணைந்து கடந்த 2014.09.15 திகதி உலக நாச்சியின் சிலை ஒன்றை நிர்மானித்திருந்தனர்.


வாள் ஏந்திய உலக நாச்சியின் திருவுருவச்சிலையின் வாள் ஏந்திய கையினையும் வாள் பகுதியினையும் ஞாயிற்றுக் கிழமை (15) நள்ளிரவு  இனந் தெரியாதவர்கள் உடைத்து சேதப்படுத்தி விட்டுச் சென்றுள்ளதாக தெரிய வருகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளருமாகிய பூ.பிரசாந்தன் காத்தான்குடி பொலிசில் திங்கட் கிழமை முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

உலக நாச்சி வாழ்ந்த இடமும் காசிலிங்கேஸ்வரர் ஆலயம் இருந்த இடிபாடுகளும் இப்பகுதியில் அதிகம் காணப்படுகின்றது. இப் பகுதியினை தொல் பொருள் திணைக்களம் புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தி ஆய்வு செய்யுமாறு கோரி ஊர் மக்களாலும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினராலும் கோரிக்கை விடுக்கப்பட்டமை  இங்கு  குறிப்பிடத்தக்கது.





SHARE

Author: verified_user

0 Comments: