25 Mar 2015

இந்திய உயர்ஸ்தானிகர் மட்டு விஜயம்

SHARE
மட்டக்களப்புக்கு மாவட்டத்திற்கு இன்று (24) பகல் விஜயம் செய்த இந்திய உயர்ஸ்தானிகர் பெண்கள் சுயதொழில் அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
 
கல்லடியில் கைத்தொழில் திணைக்களத்தின் கட்டத்தில் இயங்கும் அவர்களது பயிற்சி நிலையத்தில்- அமைப்பின் தலைவி திருமதி அ.ரஜனி தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
 
இந்திய இலங்கை நட்புறவுத்திட்டத்தின் கீழ் கடந்த 2011ஆம் ஆண்டு இந்தியாவின் சேவா அமைப்பின் ஊடாக கிழக்கு மாகாண சபையுடன் இணைந்து யுத்தத்தால் பாதிக்கப்பட்டு கணவனை இழந்த- கணவனால் கைவிடப்பட்ட நிலையில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பெண்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் 40 பேருக்கு அஹமதாபாத்தில்- தையல், உணவுப்பதனிடல், கணணிப் பயிற்சி, சோலார் திருத்துதல், மழைநீர்  சேகரிப்பு தாங்கி அமைத்தல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன.
 
இதனையடுத்து மேலும் 800 பெண்கள் தெரிவு செய்யப்பட்டு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.  சேவா அமைப்பின் பயிற்சிக் காலம் நிறைவடைந்த நிலையில் இப் பெண்கள் தாமாக முன்வந்து மட்டுப்படுத்தப்பட்ட கிழக்கு மாகாண பெண்கள் அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தினை அமைத்து தற்போது செயற்பட்டு வருகின்றனர்.
 
பயிற்சிகளை நிறைவு செய்த 25 பெண்களுக்கான சான்றிதழ்கள் இன்று வழங்கப்பட்டன. அத்துடன் அவர்களது தொழில் நிலையத்தினையும் உயர்ஸ்தானிகர் பார்வையிட்டார். 
 
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மாவட்ட சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர் ஏ.அருள்மொழி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Indian-2
Indian-4
Indian-3

SHARE

Author: verified_user

0 Comments: