சம்பூர்
பிரதேசத்திலே இடம்பெயர்ந்த மக்கள் ஏப்ரல் மாதம் 30ம் திகதிக்கு முன்னர்
அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர். அதற்குறிய
பூர்வாங்க வேலைகள் அரச உயர் மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என
திருகோணமலை அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார தெரிவித்தார்.
இன்று
(24) நடைபெற்ற மூதூர் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற கலாசார விழாவில்
பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர்
தொடர்ந்து தெரிவிக்கையில்- மூதூர் பிரதேச செயலகப்பிரிவில் மூவின மக்களும்
வாழ்வது சிறப்பிற்குறியது. அரசாங்க அதிபராக பதவியேற்று மூதூர் பிரதேச
செயலகத்திற்கு மேற்கொண்ட முதலாவது விஜயமாக இதுவாகும். மக்கள் மத்தியில்
சந்தேகங்களின்றி வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துவது- முரண்பாடற்ற நிலையை
தவிர்க்க ஏதுவாக அமையும்.
எவ்வித
வேறுபாடுகளுன்றி அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவேன். ஜனாதிபதியின் பிரதான
நோக்கம் நல்லாட்சி மூலம் அனைவருக்கும் சமஉரிமையயை வழங்குவதேயாகும் என
அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.
மேலும்
100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் கர்ப்பிணி தாய்மார்களுக்கு போசாக்குணவு
அரசாங்க அதிபரினால் வழங்கப்பட்டது. ஒரு கிராமத்திற்கு ஒரு
வேலைத்திட்டத்திற்கான நிதி பிரதேச செயலாளரிடம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
கிராமத்திற்கு மிக அவசியமான வேலைத்திட்டத்தை முன்மொழியுமாறும்
சம்பந்தப்பட்ட தரப்பினரை அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.
கடந்த
வருடம் ஆரம்பிக்கப்பட்டு 25 வீதமான வேலைகள் முடிவடைந்த நிலையில் உள்ள
அபிவிருத்தி திட்டங்களை மீள ஆரம்பிக்க நிதி ஒதுக்கப்படும் என்றும் கடந்த
காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் ஒருபோதும் இடை
நிறுத்தப்படமாட்டாது என்றும் அதற்குறிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும்
அரசாங்க அதிபர்
சுட்டிக்காட்டினார்.
ஆரம்பக்கல்வி
செயற்பாடு மீது மீது துறைசார் அதிகாரிகள் கூடிய கவனம் செலுத்துவேண்டும்
என்றும் பிரதேச அபிவிருத்திக்காக அனைவரும் ஒன்றினைந்து செயற்படுவதன் மூலம்
விரைவான மாற்றத்தை பிரதேசங்கள் அடையமுடியும் என்றும் அரசாங்க அதிபர்
வேண்டுகோள் விடுத்ததுடன் இதற்காக அனைவரும் அர்ப்பணிப்புடனான சேவையை வழங்க
வேண்டும் என்றும் தெரிவித்தார்.
திருமலை
அரசாங்க அதிபரை- மூதூர் பிரதேச செயலாளர் பொன்னாடை அணிவித்து,
நினைவுச்சின்னம் வழங்கிவைக்கப்பட்டமை இந்நிகழ்வின் விசேட அம்சமாகும்.
இந்நிகழ்வில்
திருமலை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் என்.பிரதீபன்- கிழக்கு மாகாண கலாச்சார
திணைக்கள பணிப்பாளர் திரு விக்ரம ஆரச்சி உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.
0 Comments:
Post a Comment