25 Mar 2015

கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு உத்தியோகத்தர்களுக்குப் பயிற்சி

SHARE
கல்முனை - மட்டக்களப்பு மாநகர சபைகள் இணைந்து கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி ஒன்றினை இன்று (24) ஆரம்பித்தனர்.
 
 மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் இதற்கான ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது.
 
இவ் தீயணைப்புப் பிரிவு உத்தியோகத்தர்களுக்கு மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்புப்பிரிவு பொறுப்பாளர் விவேகானந்த பிரதீபன் தலைமையிலான குழுவினர் பயிற்சிகளை வழங்கினர்.
 
மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கல்முனை மாநகர சபை மேயர் நிசாம் காரியப்பர், மட்டக்களப்பு மாநகர சபை பிரதி ஆணையாளர் ரி.தனஞ்சயன், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
 
Fire-1
Fire-2
Fire-3
SHARE

Author: verified_user

0 Comments: